களையும், திருநீற்றுப்
பையினையும், தருப்பையையும் முடிந்து கொண்டு
அமர்நீதியார் திருமடத்தைச் சேர்ந்தனர். அவர் முகமலர்ந்து தேவரீர் இங்கு
எழுந்தருள அடியேன் பெருந்தவஞ் செய்தனன் என்று எதிர்கொள்ளப்,
பிரமசாரியார், அடியார்களுக்கு நீர் மேன்மையாக உணவூட்டிக் கந்தையும்,
கீளும், உடைகளும், அழகிய வெண்கோவணங்களும் ஈகின்றது கேட்டு
உம்மைக்காண வந்தனம் என்றார். அமர்நீதியார் இத்திருமடத்திலே
மறைப்
பெருந்தவர்கள் அமுது செய்ய அமைப்பது முண்டு. நீரும் இங்கு இன்று
அமுது செய்தருள வேண்டும் என்று பணிந்தனர். அவர் அதற்கிசைந்தவராகி,
நான் காவிரி நீராடி வர, மழை வரினும் உதவும்பொருட்டு, இந்தக் காய்ந்த
கோவணத்தை வாங்கி உம்மிடத்தில் வைத்திருந்து தருவீராக; ஓங்கு
கோவணப் பெருமையை உள்ளபடி உமக்கு நான் சொல்ல வேண்டுவதில்லை
என்று சொல்லித் தமது கைத்தண்டின்மீதிருந்த கோவணங்கள்
இரண்டினிலொன்றை அவிழ்த்து அவர் கையிற்கொடுத்தார். அமர்நீதியார்
அதை வாங்கிக்கொண்டு விரைவிற்குளித்துத் தேவரீர் இங்கு எழுந்தருளுக
என்று வேண்ட, அவரும் காவிரி ஆடுதற் கென்று சென்றனர். அன்பரும்
அவர் சொல்லியபடியே அக்கோவணத்தைத் தமது கோவணவகைகளிலன்றி
வேறு தனியிடத்திற் றனிச் சேமத்தில் வைத்தனர்.
போயின வேதியர், விரைந்து அக்கோவணத்தை அவ்விடத்தினின்று
போக்கிக், கங்கைநீர் தோய்வதோ? அன்றிக் காவிரிநீர் படிவதோ இவற்றுள்
எதுசெய்தாரோ அறியோம்; மழைபொழிய நனைந்து வந்தணைந்தனர். அவர்
வருமுன்னரே, அமுதாக்குவித்துக் காத்திருந்த நாயனார், அவரை எதிர்
கொண்டிறைஞ்ச, அவர் தண்டின் மேல் உள்ள கோவணம் ஈரமாயிற்று;
ஆதலின் நான் தந்த கோவணத்தைக் கொண்டு வாரும் என்றனர். ஐயர்
செய்த மாறுபாட்டை அறியாதஅன்பர் அதனைத் தாம்வைத்த
இடத்தினிற்றேடிக்காணாது திகைத்தனர். தம் சரக்கில் எங்கும் நாடியும்
கண்டிலர். மனைவியாரும் கிளைஞரும் தாமும் இடர் கூர்ந்தனர். வேறு
ஒன்றும் நினைக்கமாட்டாதவராய், வேதியர்புனைவதற்கு வேறொரு
கோவணங்கொண்டு அவர் முன் வந்து அடிகளே! நீர்தந்த கோவணத்தை
நான் வைத்த இடத்திற் கண்டிலேன். வேறிடத்தில் அதனை ஒளித்தார்
பிறருமில்லை. அஃதொழிந்த படியை அறிந்திலேன். இது அதிசயம்! வேறு
நல்ல கோவணங் கொண்டு வந்தேன். இது கிழித்த கோவணமன்று;
நெய்தமைத்தது. ஈரத்தை மாற்ற இதனைச் சாத்தி எனது பிழை பொறுப்பீராக
என்று வணங்கினார். வேதியர், அமர்நீதியாரே! நிலைமை மிக நன்று! நாள்
இடையிற் கழிந்ததுமில்லை. இன்று நான் வைத்த கோவணத்தைக் கொண்டு,
அதற்கெதிர் 'வேறொன்று கொள்க' என வுரைப்பதோ நீர்?, கோவணம்
கொடுப்பன்' என்று நாளும் உலகில் நீர் சொல்லுவித்தது என் கோவணம்
கொள்வது துணிந்தோ? என்று மிகக் கடுங்கோபங் கொண்டார் போலக்
கூறினார். அன்பர், முகம்புலர்ந்து இஃது அடியேன் அறிய வந்ததன்று;
சிறியேனது பெரும்பிழையினைப் பொருத்தருளுக! இனித் தேவரீர் பணித்தபடி
செய்வேன்; நல்ல பட்டாடைகள் மணிகள் முதலியவற்றில் கோடி
கொண்டருளுக என்று மிகப் பயத்துடனே பலமுறை பணிந்தார். மறையவர்
கோபந்தணிந்தார் போன்று காட்டி எனக்கு உங்கள் மணியும்வேண்டுவதின்று;
பொன்னும் வேண்டுவதின்று. எனது கோவணத்துக்கு நேர்பெறக் கோவணந்
தருதலே அமையும் என்றார். அன்பர் மகிழ்ந்து அஃது தரும்பரிசுதான்
யாது? என்ன, மறையவர் நாம் உடுத்தியிருக்கும் கோவணம் நிற்க, உம்
கையில் நாம் தர நீர் கெடுத்ததாகச் சொல்லும் அந்தக் கோவணத்துக்கு நேர்
இதுவாகும் என்று சொல்லித் தண்டின் மேல் இருந்த அதனை அவிழ்த்து
எடுத்து இதற்குச் சமனாகிய எடைகோவணந்தாரும் என்றனர். மிக
நன்று
என்று அன்பர் இசைந்து ஒரு துலை நாட்டினர். அதில் ஒரு தட்டில்
மறையவர் தமது அந்த மற்றைக் கோவணத்தையிட்டனர். அன்பர் மற்றைத்
தட்டில்தம் கையிலிருந்த கோவணத்தையிட்டனர். அது நேர் நின்றிலது.
|