பக்கம் எண் :


குங்குலியக்கலயநாயனார்புராணம்1091

 
853.



செங்கண்வெள் ளேற்றின் பாகன் றிருப்பனந் தாளின் மேவு
மங்கணன் செம்மை கண்டு கும்பிட வரச னார்வம்
பொங்கித்தன் வேழ மெல்லாம் பூட்டவு நேர்நில் லாமைக்
கங்குலும் பகலுந் தீராக் கவலையுற் றழுங்கிச் செல்ல,



23
     
854.



மன்னவன் வருத்தங் கேட்டு மாசறு புகழின் மிக்க
நன்னெறிக் கலய னார்தா நாதனை நேரே காணு
மந்நெறி தலைநின் றானென் றரசனை விரும்பித் தாமு
மின்னெறித் தனைய வேணி விகிர்தனை வணங்க வந்தார்.



24

     852. (இ-ள்.) வெளிப்படை. ஊர்கள் தோறும் பலிகொள்ளும்
சிவபெருமானது திருவருளினாலே இவ்வுலகில் நிறைந்த செல்வமுடைய
வராகிய தன்மையில் மிகுந்து, சிறந்த அமுதினை, நல்ல செழிய கறி, தயிர்,
நெய், பால் இவற்றுடன் நிறைய மிக்க அன்புடன் சிவனடியார்களுக்கு
உதவுகின்ற நாளிலே, 22

     853. (இ-ள்.) வெளிப்படை. செங்கண்ணுடைய வெள்ளை எருதின்
பாகராகிய திருப்பனந்தாளில் எழுந்தருளியிருக்கும் அங்கணரை நேரே
நிற்கும் தன்மையைக் கண்டு குறிப்பிடவேண்டுமென்று அரசன் ஆசை
பொங்கித் தமது யானை முதலியவை யெல்லாம் பூட்டவும் இறைவரது
திருமேனி நேர் நில்லாதபடியால் அரசன் இரவும் பகலும் தீராத கவலையுற்று
மனம் வருந்திச் செல்ல, 23

     854. (இ-ள்.) வெளிப்படை. அந்த அரசனது வருத்தத்தைக்
கேள்விப்பட்டுக் குற்றமற்ற புகழும், நன்னெறி யொழுகும் ஒழுக்கமும் உடைய
கலயனார் இறைவனை நேர் காணும் அந்நெறியிலே தலைநின்றான் என்று
அவ்வரசனை விரும்பி, மின்னல் நெறிகொண்டாற்போன்ற சடைமுடியுடை
விகிர்தராகிய சிவபெருமானை வணங்குதற்பொருட்டு வழிபட்டனர். 24

     இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     852. (வி-ரை.) ஊர்தொறும் - எவ்வூரிலுமுள்ள எவ்வுயிர்களிடத்தும்.
ஊர் ஆகுபெயர்.

     பலிகொண்டு உய்க்கும் - பலி - பிச்சை. கொண்டுய்க்கும்
என்பது ஒரு சொன்னீர்மைத்தாய்க் கொள்ளும் என்ற பொருளில் வந்தது.
பலியைத்தான் கொண்டு, பலி இட்டோரைத் தனது பதத்திற் செலுத்துகின்ற
என்றலுமாம். இப்பொருட்கு உய்த்தல் - செலுத்துதல் - வைத்தல் என்க.
"பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன்" என்பது திருவாசகம்.
உய்த்தலாவது - "நிரந்தரமாக நினையு மடியார், இரந்துண்டு தன்னடி
யெட்டச் செய்"தல் என்று கொள்ளுதலுமொன்று. இறைவன் பிட்சாடனராக
எழுந்தருளிப் பிச்சை ஏற்கும் வரலாறு கந்தபுராணத்துட் காண்க. இதனைப்
பற்பலவாறும் பாராட்டுவது அன்பர் வழக்கு. "துள்ளுமறி யாமனது பலிகொடுத்
தேன்" என்று தாயுமானார் கூறியபடி இவர்கொள்ளும் பலியாவது
ஆன்மாக்களின் பசுபோதமும் அதற்கு விடயமாகிய வினைப்பயன்களுமாம்.
ஊர்தொறும்
- என்ற கருதைப்பற்றி "இங்குநம் மில்லங்க டோறு
மெழுந்தருளிச், செங்கமலப் பொற்பாதந் தந்தருளும் சேவகனை"
(திருவெம்பாவை 17) என்ற திருவாசகத்தினை உன்னுக. இவைபற்றி 413-ல்
உரைத்தவையும் பார்க்க.

     ஒருவன் - ஒப்பற்றவன். "நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்"
(தனித்திருத்தாண்டகம் 7) என்றபடி சிவபெருமான் ஒருவனே பதி - தலைவன்
என்பதாம். "ஒருவர்" (843) என்ற விடத்துரைத்தவை பார்க்க.

     ஒருவனது அருளினாலே ..... செல்வமுடையராம் பண்பின் நீடி -
அவர் பிச்சை கொள்வாராயினும் தம்மை யடைந்தார்க்கு எல்லாச் செல்வமும்
அருளவல்லார்