என்றதனாற் பிச்சை
கொள்வது தம்பொருட் டன்று என்பதாம், "படங்கொண்டு
பாயும் பூவணையும் தருவா யெனினும் படுதலைகொண், டிடங்க டோறு
மிரப்பா யென் றேசுவார்க்கென் பேசுவனே" என்ற திருவிளையாடற்
புராணத்தினுள் இது சுவைபட விளக்கப்படுதல் காண்க.
பாரினில்
ஆர்ந்த செல்வம் - உலகின் உண்மை அனுபவங்களுக்கு
எவ்வெச் செல்வங்கள் வேண்டுமோ அவை முழுதும் நிறைந்த என்றபடி,
உடையராம் பண்பில் நீடி - பாரில் பலர்
ஆர்ந்த
செல்வமுடையராயிருந்தும் அவ்வுடைமையின் பண்பு இல்லாதாராய்க்
கழிகின்றார்கள். அவ்வாறல்லாது அருளாற் பெற்றசெல்வமாதலின் அதனை
உடையாராதலோடு உடைய பண்பினாலும் நீடினார் என்றுகுறிக்க
உடையராய்
நீடி என்னாது உடையராம் பண்பின் நீடி என்றார்.
அப்பண்பாவது
செல்வம் பெற்றதால் ஆகிய நீடுபயன்பெறுதல். அப்பயனாவன அரன்பூசையும்
அடியார்க்க முதளித்தலுமேயாம். 441-504 முதலியவற்றுள் உரைத்தவைபார்க்க.
இது குறிக்கப் பண்பில் நீடி. ....... உதவும் நாளில்
என்று உடன்சேர்த்துக்
கூறினார்.
நல்ல
செழும் கறி தயிர் நெய் பாலாற் சீருடை அடிசில் உதவும்
என்று கூட்டி உரைத்துக்கொள்க. நல்ல - குணத்தால் நன்மைதரும்.
இவற்றைப் பதார்த்தகுண சிந்தாமணி முதலிய மருத்துவநூல்களுட்
கண்டுகொள். தூய இடத்திற் றூயனவாகப் பயிரிடப்பட்ட என்பதும்
உடன்கொள்க. செழுமை - இளையவை - முதியவை
என்றவ்வவற்றுக்கேற்ற
நிலை, அழுகல் - வாடல் - புழுக்கடி முதலிய கேடு இல்லாத நிலை
முதலாகிய தன்மைகள். ஆல் - என்ற விகுதியை
தயிர் நெய்
என்பவற்றுடனும் தனித்தனிகூட்டுக. உணவுப்பொருள்களில் இவையேதலைமை
பெற்றனவும் இன்றியமையாதனவும் சத்துவமுடையனவும் ஆம். ஆதலின் கறி
தயிர் நெய் பால் அடிசில் என்ற இவற்றைக் கூறினார். கூறினாரேனும்
உடனுண்ணும் இனம்பற்றிப் பருப்பு முதலியவையும், சுவைதரும் தகுதிபற்றி
உப்பு முதலியவையும் உடன் கொள்க. சீருடை அரிசி -
என்று பாடங்
கொள்ளின் செந்நெல்லரிசி என்றுரைத்துக் கொள்க. அதுவே அடிசிற்குச்
சீருடையதாம். அரிவாட்டாய நாயனார் புராணம் பார்க்க.
ஆர்தரு
காதல் கூர - நிறைந்த ஆசை மேலும் மிக.
கூர்தல் -
உள்ளது சிறத்தல்.
அடியவர்க்குதவும்
- "உருத்திர பல்கணத்தார்க் கட்டிட்டல்" என்ற
ஆளுடைய பிள்ளையாரது திருமயிலைத் தேவாரங் காண்க. 22
853.
(வி-ரை.) செங்கண்
- வெள்விடை - 827 பார்க்க.
திருப்பனத்தாளின் மேவும் அங்கணன் - திருப்பனந்தாள்
-
தலவிசேடத்தில் உரைப்பவையும், 78-ல் உரைத்தவையும் பார்க்க. பனையின்
அடியில் இறைவன் எழுந்தருளியிருக்கும் தலம் என்பது பொருள். காரண
இடுகுறிப்பெயர். அங்கணன் - அழகிய கண்
- அங்கண்மை - உடையவன்.
கண்ணுக்கு அழகாவது கண்ணோட்டம். இங்குச் சிவபெருமானது
பேரருளுடைமை குறித்தது.
செம்மைகண்டு
கும்பிட - இவரது இலிங்கத்திருமேனி சாய்ந்திருந்தது
கண்டு வருந்தி அதனை நேரே நிற்கக்கண்டு கும்பிடவேண்டி. செம்மை
-
இங்கு நேர் நிற்கு நிலை குறித்தது. அங்கணன்செம்மை -
என்றதனால்
அங்கண்மையாற் குனிந்து நின்றவர் என்பது குறித்தார்.
ஆர்வம்
பொங்கி - ஆசை மிக்கதனாற் பொங்கி. பூட்டவும்
-
யானை பூட்டி ஈர்த்த இது செய்ய வேண்டாததும், செய்யக்கூடாதது
மாகியதொரு செயல் என்ப. என்னை? அரசன் இறைவன்றிருமேனியைத் தான்
கண்டவாறே வணங்குதல் வேண்டுமன்றி, மற்ற சிதைவுபட்ட கோயில்
முதலியவற்றைப் போலத் திருமேனியையும் எண்ணிச் செப்பனிட நினைத்தல்
தவறாம். இந்நாளிலும் சிலர் விதிகடந்து, இத்திருவுருவங்களை நிலை
பெயர்த்தும், உயர்த்தியும், தாழ்த்தியும், உருமாற்றியும் பலபடியாகத் தாந்தாங்
கருதியவாறெல்லாம் செப்பனிட நினைந்தும்
|