பக்கம் எண் :


குங்குலியக்கலயநாயனார்புராணம்1093

 

செய்தும் வருகின்றார்கள். இது பெருந்தவறு. கோயில்க களிலேயும்
சிதைவுபட்ட பகுதிகளை மட்டும் சிதைவுகண்ட அவ்வப்போது முன்னிருந்த
அவ்வாறே செப்பனிட வேண்டுமென்பது விதி. "தாபர லிங்கம் பறித்தொன்றிற்
றாபித்தால், ஆவதன் முன்னே யரசு நிலைகெடும், சாவதன் முன்னே
பெருநோ யடுத்திடும், காவலன் பேர்நந்தி கட்டுரைத் தானே", "கட்டுவித்
தார்மதிற் கல்லொன்று வாங்கிடில், வெட்டுவிக் கும்அபி டேகத் தரசரை,
முட்டுவிக் கும்முனிவேதிய ராயினும், வெட்டுவித் தேவிடும் விண்ணவ
னாணையே" என்பனவாதி திருமூலர் திருமந்திரங்கள் காண்க. விதி
இவ்வாறாயினும் "உவப்பதன்கண், குற்றமுந் தோன்றாக் கெடும்" என்றபடி
ஆர்வம் பொங்கியதனால் விதியையும் கடந்து இது செய்தனன் என்ற
குறிப்புங்காண்க.

     இத்தலத்து இறைவர் திருமேனி சாய்ந்து நின்றதன் வரலாறு
தலவிசேடத்துக் காண்க. திருவருள் வெளிப்பாட்டினை யாவரும் உணர்ந்து
உய்யும் பொருட்டுச், சாய்ந்த இறைவர் அவ்வாறே சாய்ந்து நின்ற நிலையை
மாற்றி நேர் செய்து கும்பிடும் ஆர்வம் அரசன் அன்பினால் மேற்
கொண்டவனாயினும் அது விதிகடந்த தென்று குறிப்பித்ததும் உன்னுக.
திருப்பேரூரில் காமதேனுவின் கன்றினது காற்குளம்புச் சுவடுகளும்,
திருமுல்லை வாயிலில் அரிவாள் வெட்டுச் சுவடும், காஞ்சியில் அம்மையாரது
வளைத் தழும்பும் முலைச்சுவடும், இவ்வாறு ஆங்காங்குக் கொண்ட
எண்ணிறந்த திருவடையாளங்களும் தமது திருவருள் வெளிப்பாட்டினை
யாவரும் காணுமாறு இறைவர் தாங்கி நிற்பனவாம். அவற்றை அவ்வாறே
கண்டு கும்பிடவேண்டு மென்பது ஆகமவிதி. ஆதலின் அரசனது
ஆர்வங்கண்டும் யானைசேனைகளின் முயற்சிகளை யெல்லாங் கடந்து
இறைவர், திருமேனி நிமிராது நின்றனர் என்பதும் காண்க. பின்னர்
நேர்நின்றனரே? எனின், இதுபற்றிக் கீழே 858-ம் திருப்பாட்டில் உரைப்பவை
பார்க்க.

     வேழம் எல்லாம் பூட்டவும் நேர்நில்லாமை - பிராணிகளில் மிகப்
பலமுடையனயானைகள்; அவ்வியானைகள் பலகொண்ட யானைப்படை
முழுவதும் பூட்டியிழுக்கவும் நேர்நில்லாமையால். யானை சேனைகளின்
பலத்தைப் பெரிதாகஅரசன் எண்ணினானே யன்றி அவைகளுக்குப் பலம்தந்த
இறைவனது பலத்தை எண்ணித் தாழ்ந்தமனத்தோடு புக்கவனல்லவன்.
ஆதலின் இறைவர் நேர்நின்றிலர். ஆனால் நாயனார் கழுத்திற் கயிறு
பூட்டியவுடன் நேர்நின்றனர். தமது உடல் உயிர் முயற்சியால் இறைவனை
ஆழ நீள அளவு காண்போமென்று தேடிய பிரம விட்டுணுக்களுக்கு
எட்டாது நின்று, பின்னர் அவர்கள் தமது ஆற்றலின்மை யுணர்ந்து
துதித்தபோது வெளிப்பட்டருளினர் என்பதை அப்பர்சுவாமிகள்
இலிங்கபுராணத் திருக்குறுந்தொகையினுள் விளக்கியருளிய உண்மையினை
நினைவுகூர்க. நில்லாமை - நில்லாதபடியால் அதன்பொருட்டு.

     அழுங்கிச்செல்ல - வருந்தி இவ்வாறு நாள்செல்ல.

     பைங்கண் வெள்ளேற்றின் - என்பதும் பாடம். 23

     854. (வி-ரை.) கேட்டு - கேட்டவுடனே, கேட்டலும்.

     மாசறு புகழ் - எவ்விதக்குற்றமும் இல்லாத புகழ், குற்றநீங்கிய புகழ்.
இது நன்னெறி நிற்றலோடிணைந்த தென்பார் புகழின் மிக்க நன்னெறி
என்றார். இப் புகழ் இயல்பினால் இல்வாழ்க்கை வாழ்ந்து ஈகையிற்
சிறத்தலான் வருவதென்பர். இங்கு நாயனாரது புகழ் தமக்கொப்பில்லாத
(843) ஈகையால் வந்த செய்தி. மேற்சரித நிகழ்ச்சியால் உலகறிந்து
போற்றப்பட்டமையின் மாசறுபுகழ் என்று இங்கு எடுத்துக்காட்டினார்.
இதுபற்றியே தொடக்கத்தில் "பொங்கிய புகழின் மிக்கார்" (830) என்று
தேற்றம்பெறக் கூறியதும்காண்க.

     நாதனை நேரேகாணும் அந்நெறி தலைநின்றான் என்று - பிறிது
கருத்தின்றி இறைவனை நேர்கண்டு கும்பிடும் அந்நெறிபற்றி நின்றான்
என்றமையால். விரும்பி - அரசன் நற்செயலை விரும்பியபடியால் அவனை
விரும்பினார். இஃதில்லையேல்