3. நமது திருவடிகளை மெய்யன்போடு ஒருப்பட்ட சிந்தையுடன்
பற்றுவார்க்குச் சிவபெருமான் காலபயத்தினை நீக்கியருளுவர்.
4.
சிவபெருமான் றிருவடிகளில் உருகிய அன்பு கூர்ந்து மேன்மேல்
எழுகின்ற வேட்கையுடன் சிவத்திருப்பணிகள் செய்தல் வேண்டும்.
5.
சிவத்திருப்பணிகள் செய்துவருங் காலத்தில் வறுமை முதலிய
இடையூறுகள் நேர்ந்து மேன்மேல் வந்தடர்வனவாயினும் அவற்றைப்
பொருட்படுத்தாமலும், அவற்றால் வருந்தாமலும் தமது பணியிற்சலியாது
செய்துவருதல் அன்புடையார் திறம். அத்திதித்னுள் நின்று, அந்த அன்பினை
நுகர்ந்து நிகரில்லாத பேரின்பத்தை அருளுவர் சிவபெருமான்.
6.
தாமும் மனைவியாரும் மக்களும் இரண்டுநாள் பசியோடுகிடக்க
நேர்ந்த போதும் அப்பசி தீர்ப்பதற்கு நெல்வாங்கக் கொண்டுபோயின
தாலியினைக் கொடுத்து, எதிர்ப்பட்ட குங்குலியப் பொதியினை இறைவரது
தூபப்பணிக்கு வாங்கிய கலயனாரது செய்தி அன்புடையார்க்குத் திருத்
ததொண்டின் உறைப்பினை எடுத்துக்காட்டும் சிறந்த இலக்கியமாம். இதனை
முன்வைத்துக் கொண்டு சிவனடித் தொண்டில் மக்கள் அன்புடன்
முயல்வார்களாயிற் பெரும்பயன் பெறுவர்.
7.
சிவபெருமான் றிருப்பணிகளின் நற்பயன் இம்மை யின்பங்களையும்
தருவன. இவ்வுண்மைக்கு இந்நாயனாரது சரிதமே ஏற்றசான்றாகும்.
"இம்மையேதருஞ் சோறுங் கூறையு மேத்த லாமிடர் கெடலுமாம், அம்மை
யேசிவலோக மாள்வதற்கியாது மையுற வில்லையே" என்ற ஆளுடைய
நம்பிகள் (திருப்புகலூர்) தேவாரமுங்காண்க. அளவற்ற அடியார்களுக்கு
உளமகிழ அமுதூட்டிய நலத்தினால் இளையான்குடிமாறர் அளவற்ற
நிதிபெற்றுக் குபேரன் போல வாழ்ந்திருந்தனர். "அரிய நீர்மையி லருந்தவம்
புரிந்தானடியார்க், குரிய வர்ச்சனையுலப்பில செய்தவந் நலத்தால்" சிவநேசர்
பூம்பாவையம்மையாரைப் பெற்றனர் (திருஞான - புரா - 1040).
சிவபெருமானைப் பூசித்து மகாவிட்டுணுவும் கண்ணனும் மகப்பேறு பெற்றனர்.
இவை போல்வன பலவும் இங்கு நினைவு கூர்க. தம் கொள்கைப்படி
மோட்சம் என்ற நிர்வாணபதம் வேண்டினால் தமது புத்த விகாரங்களுக்கு
(கோயில்) போகிற புத்தர்கள் இலங்கையில் (ஈழம்), செல்வம் உடற்சுகம்
மக்கள் முதலிய இம்மைச் சுகங்களை வேண்டியபோது அங்குள்ள சிவன்
கோயில், விநாயகர்கோயில், கதிரேசன் கோயில்களில் வந்து அருச்சனை
முதலானவை செய்து வழிபடுகின்றார்கள். நம் சைவர்கள் இம்மை வரங்கள்
வேண்டி அன்னியமதக் கோயில்களில் சென்று வரங்கிடக்கக் காண்கின்றோம்.
இஃதென்ன கொடுமை! "வேண்டுவார் வேண்டுவதே யீவானா" கிய நமது சிவ
பெருமான் எல்லாம் வல்லவராய் எல்லாந் தரவல்லவராம் என்ற
நம்பிக்கையில்லாதவர்களைச் சைவர் என்ற சொல்வதெப்படி?
8.
கணவர் - மக்கள் - சுற்றத்தார் முதலிய குடும்பத்தார்களைப் பசி
யில்லாது பார்த்துச் சோறிட்டுக் காத்தல் மனைக்கிழத்தியாகிய மனைவியின்
கடன், இதுவே இவ்வாழ்க்கையின் உண்மையியல். தாம் என்று நீக்கலாகாது
அணியும் மங்கல நூற் றாலி கொடுத்தும் அதுகொண்டு நெல் பெற்றும்
இக்கடமையைச் செய்ய ஒருபட்ட கலயனாருடைய மனைவியாரது
அரியசெயலும் பெருமையும் பெண்ணுலகம் இலக்கியமாகக் கண்டு போற்றத்
தக்கன.
9.
மேலே கண்டவாறு கடமை செலுத்திய கற்புடையம்மையாருக்கு
நிறைந்த செல்வங்கொடுத்ததும், அதகைக் கணவர் அறியு முன்பு அவருக்கு
அறிவித்ததும், அவர் மூலம் கணவனாரை அறியவைத்ததும் கற்புடைமைக்குக்
கடவுள் வைத்த கருணையின் பரிசுகளாம்.
10.
சிவனருளாற்பெற்ற செல்வமுதலியபொருள்களை
அவனருளாகவேகண்டு வணங்கி ஏற்றல் முறை, ஆளுடைய பிள்ளையார்
தமக்குச் சிவபெருமாள் அளித்த
|