பக்கம் எண் :


1162 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

கற்பனை :-

     1. நூற்பயன் நன்குணர்வோராற் பாடப்படுவது நகரங்களுக்குச்
சிறப்புத்தருவதாம்.

     2. அவ்வவ்விடங்களில் நிகழ்ந்த சிறந்த சரிதக்குறிப்புக்களை அங்குச்
சூழ்ந்துள்ள நிலம் நீர் தாவர முதலிய இயற்கைப்பொருள்களே காட்டி
நிற்பனவாகக் கண்டு காட்டுமியல்பு சிறந்த பெருங்கவிகளில் அமைவதாம்.

     3. அறத்தினிலையின் சால்புடையது மனையறம்; வினைகளிற்
சால்புடையது உழவு.

     4. விழாக்கள் மலிவது நகரங்களின் சிறப்புக்காட்டும்.

     5. அரசர் சேனாபதியாயிருத்தலும் வேளாளர்களுக்கு உரியது.
அவ்வகையில் வழிவழி வரும் குடிகளும் உண்டு.

     6. மெய்ப்பொருளை அறிந்துணர்ந்த பெரியோர்கள் சிவபெருமான்
தொண்டர்க்கே ஏவல் செய்வர். தம்மையும் தம் பொருள்களையும் அவர்களது
உடைமைப் பொருளென்றெண்ணி அவர் வேண்டுவனவற்றைக் குறிப்பறிந்து
கொடுப்பர். இவை பெருஞ் சிவபுண்ணியங்களாய்ச் சிவவாழ்வைத் தேடிக்
கொடுப்பன.

     7. சிவபெருமானது வழிபாடு நன்மக்கட்பேறு முதலிய உலக போகப்
பயன்களையும் இறுதியில் வீடுபேற்றையும் தரவல்லது.

     8. பெண்மகப்பேறும் ஒருவற்குப் பிறவியினின்றும் பிழைக்கும்
உயர்நெறியினைக் கூட்டுவிக்கும்.

     9. ஒத்த மரபும் அரன்பால் ஒத்த அன்பும் உடையார்க்கே உயர்குடிப்
பிறந்தோர் மகட்கொடை நேர்வர்.

     10. மணத்தாற் பிணைக்கப்படும் இருதிறத்தார்க்கும் நேர்வாய
நற்பயன்றரப் பொருந்துமாறு மணநாள் வகுத்தல் மதிநூல் வல்லவர் கடன்.

     11. திருநீற்றினை நிறையப்பூசி, எலும்பணிகள், மயிர்க்கயிறாகிய
பஞ்சவடி, யோகப்பட்டிகை, திருநீற்றுப் பொக்கணம், கடிசூத்திர உடை
முதலியன தாங்கி வருதல் மாவிரதர் என்ற சைவ உட்சமயத்தார்
மேற்கொள்ளும் கோலமாம்.

     12. மணமகளைப் பெரியோர்பாற் பணிவித்து அவர்களது ஆசிபெறச்
செய்தல் முந்தையோர் மரபு.

     13. ஒரு மகளின் மலர்க்கூந்தலை மணநாளில் அடியில் அரிந்து (அடியார்க்கு) மாவிரதியார்க்குத் தரவல்லது உறைப்புடைய பேரன்பின் திறம்.

     14. இவ்வாறு பற்றுக்கள் அறக்களையக்கண்ட நிலையே இறைவனை
வெளிப்படக்காணும் நிலையாம். அன்பு முறுகி விளைதலின்கண் அருளும்
வெளிப்படத் தோன்றும். தமது எஞ்சிநின்ற இடதுகண்ணையும் தோண்ட
அம்பினை ஊன்றிய போது கண்ணப்பருக்கும், கற்பாறையில் தலையை மோத
முற்பட்ட போது திருக்குறிப்புத் தொண்டருக்கும் இறைவனது வளையணிந்த
இடதுகை வெளிப்படத் தோன்றி அச்செயல்களைத் தடுத்துப் பேறு தந்த
சரிதங்களும் அவை போன்றனவும் நினைவுகூரத் தக்கன.

     15. தமது ஒரு மகளாரின் மலர்க்கூந்தலை மணநாளில் அடியோடு
அரிந்த அக்கணமே உலகப்பற்று அடியோடு அரிந்தெடுக்கப்பட்டதாம்.
"அற்றது பற்றெனி லுற்றது வீடு", "அவற்றவர்க் கற்றசிவன்" என்பன காண்க.

     16. எந்தக் காலத்தில் எப்பொருளைக் கொடுத்தல் பிறர்க்கு
இயலாததாகுமோ அதனைக் கொடுத்தலே செயற்கரிய செய்கை. தாமும்
மனைவி மக்கள் சுற்றமும் இரு பகல் உணவில்லாது வருந்திய நிலையில்,
நெற்கொள்ளக் கொண்டுசென்ற தாலியினைக், குங்குலியத்திற்கு மாறிய அரிய
செய்தியும்,