13.
அரிவாட்டாய நாயனார் புராணம்
|
தொகை
(மலைமலிந்த
தோள்வள்ளன் மானக்கஞ் சாறன்)
எஞ்சாத வாட்டாய னடியார்க்கு மடியேன்.
- திருத்தொண்டத்தொகை
வகை
வள்ளற் பிராற்கமு
தேந்தி வருவோ னுகலு"மிங்கே
வெள்ளச் சடையா ! யமுதுசெய் யாவிடி லென்றலையைத்
தள்ளத் தகு" மென்று வாட்பூட் டியதடங் கையினன்காண்
அள்ளற் பழனக் கணமங் கலத்தரி வாட்டாயனே. |
விரி
903.
|
வரும்பு னற்பொன்னி
நாட்டொரு வாழ்பதி
சுரும்பு வண்டொடு சூழ்ந்து முரன்றிட
விரும்பு மென்க ணுடையவாய் விட்டுநீள்
கரும்பு தேன்பொழி யுங்கண மங்கலம். |
1
|
புராணம்
:- அரிவாள்தாயர் என்ற பெயருடைய நாயனாரது சரித
வரலாறும் பண்புங் கூறும் பகுதி. நிறுத்தமுறையானே இலைமலிந்த
சருக்கத்தில் ஆறாவதாய அரிவாட்டாயரது சரிதங்கூறத் தொடங்குகின்றார்.
தொகை
:- குறைவுபடாத அரிவாளினையுடைய நாயனாரது
அடியார்களுக்கு நான் அடியேனாவேன். நாடோறும் சிவனுக்கு ஊட்டிவந்த
செந்நெல்லரிசி முதலியன தமது நிலையிற்றாழ்வு வருமாறு அவை கமரிற்
சிந்திய போது உலகில் யான் எனது என்று உள்ள பற்றுக்கள் ஒன்றும்
எஞ்சாது முழுவதும் அற, உயிரினை நீக்கத் துணிந்து கழுத்தை அரிந்து,
தாழ்வு வராமற்காத்த செய்தி குறிக்க எஞ்சாத வாள் என்றார்.
வாள் -
நெல்லறுக்கும் அரிவாள். தாயர் - நாயனாரது
பெயர். இதன் விரி 924-ல்
பார்க்க.
வகை
:- வள்ளலாகிய சிவபெருமானுக்கு அமுது ஏந்தி வருபவர்
அப்பொருள்கள் நிலத்தின் கமரில் சிந்த, கங்கைசூடிய சடையரே! இவற்றை
இங்கே அமுது செய்யாவிடில் என் தலையை அரிந்து தள்ளுதல் தகுதி"
என்று அரிவாளைக் கழுத்திற் பூட்டி அரிந்த வலிய கையினை உடையவர்,
சேறுடைய வயல் சூழ்ந்த கணமங்கலத்தில் அவதரித்த
அரிவாட்டாயர்
என்பவரேயாம்.
வள்ளற்பிரான்
- பேரருட் கொடையுடையவர் - சிவபெருமான்.
அமுது - இங்குத் திருவமுதுக்குரிய செந்நெல்லரிசியும், செங்கீரையும்,
மாவடுவும் குறித்தன; உகலும் - உம்மீற்று
வினை யெச்சம்; உகுதல் -
சிந்துதல்; வெள்ளம் - கங்கை; தலையைத்
தள்ளத்தகும் - 918 பார்க்க.
தடங்கை - தலையை உடலினின்றும் வேறு தள்ளுமாறு தம் கழுத்தை
அரியும் பெருவலிமை குறித்தது; கணமங்கலம் -
நாயனாரது ஊர்.
முதனூல்
பேரும் சரித நிகழ்ச்சிக் குறிப்பும் பேசிற்று. வகைநூல்
பேரும் ஊரும் சரித நிகழ்ச்சியும் பண்பும் வகுத்தோதியது. இவை
விரிந்தபடியை விரி நூலுட் காண்க.
903.
(இ-ள்.) வெளிப்படை. புனல் வருகின்ற காவிரி
பாயும் நாட்டில்
வாழ்வுடைய ஒரு பதியாகும். சுரும்புகள் வண்டுகளோடு
சூழ்ந்து முரல,
விரும்பப்படும் மெல்லிய கண்களுடைய வாய் விட்டு நீளும் சுரும்பு
தேனினைச் சொரிதற் கிடமாகிய கணமங்கலம் என்ற ஊர்.
(வி-ரை.)
புனல்வரும் பொன்னி - என மாற்றுக.
என்றும்
பொய்க்காமலும் பருவம் மாறாமலும் நீர் வருகின்ற காவிரி என்க. "பூந்தண்
பொன்னி யெந்நாளும் பொய்யா தளிக்கும் புனல்நாட்டு" (சண்டீசர் - புரா -
1) என்றது காண்க. இவ்வாறன்றி வருபுனல் என்றதற்கு
அகத்தியரது சிறிய
கமண்டலத்தினின்றும் பெருகிவரும் என்றுரைப்பாருமுண்டு.
வாழ்
ஒருபதி என்க. வாழ்பதி - முக்காலத்துக்கும்
பொதுவாகிய
வினைத் தொகை. பதியில் உள்ளாரது வாழ்வு பதியின் மேலேற்றப்பட்டது.
வாழ்விக்கும் பதி எனப் பிறவினையாகப் பொருள் கொள்ளலுமாம். ஒருபதி
- ஒரு - ஒப்பற்ற. இஃது இச்சரித நிகழ்ச்சிப் பெருமையின் விளைவாகிய
சிறப்பு.
சுரும்பு - ஆண் வண்டு; வண்டு - பெண் வண்டு:
இது மரபு வழக்கு.
ஒடு உருபினைப் பெண்வண்டொடு புணர்த்திக்
கூறியது சிறப்பு நோக்கி.
"சோலையில் வண்டினங்கள் சுரும்போடிசை முரல" (திருவாரூர் -
வியாழக்குறிஞ்சி - 2) "தேனும் வண்டு மின்னிசை பாடுந் திருப்பாசூர்"
(காந்தாரம் -11), "சுரும்புந்தும்பியும் சூழ் சடையார்" - (தண்டலை நீணெறி - 1)
என்ற ஆளுடையபிள்ளையார் தேவாரங்களும் பிறவுங் காண்க. வண்டு -
தேன் வண்டு என்பாருமுண்டு.
முரன்றிட
- பண் பாடி ஒலிக்க. ("கமலவண்டு), தூய நீறுபுனை
தொண்டர்க ளென்னச் சென்று சென்றுமுரல் கின்றன கண்டு" (242) பார்க்க.
முரலா நிற்பக் கரும்பு தேன் சொரியும் கணமங்கலம் எனக் கூட்டிக்கொள்க.
இவ்வாறன்றி முரன்றிட - விரும்பும் மென்கண் உடையக்
கரும்பு
வாய்விட்டுத் தேன் சொரியும்
|