(வி-ரை.) செந்நெல் - கார் நெல்லினும்
செந்நெல் சிறந்தது. அன்றியும்
இச்சரித நிகழ்ச்சியினைக் காட்டும் சிறப்பும் வாய்ந்தது. 908. 913 பார்க்க.
எங்கும் செந்நெல்லேயாகி விளங்கும் தன்மை குறிப்பிற்காட்டிய படியுமாம்.
கட்ட
- களையப்பட்ட. களைகட்டல் என்பது உழவு மரபு வழக்கு.
தாமரையைக் களையாகக் களையும் வயல்கள் இந்நாளிலும் பல இடங்களிற்
காணவுள்ளன.
செந்தாமரை,
முன்னர் தந்து உமிழ் முத்தம் சொரிந்திட -
தாமரைகளில் முத்து விளைவதில்லை. அவை முத்தம் சொரிந்திடல்
வேண்டுமாயின் பிற இடத்தினின்று பெற்றிருத்தல் வேண்டும்.
களையப்படுமுன்பே சங்குகள் அவற்றில் ஏறிமுத்துக்களை ஈன்றன.
அம்முத்துக்கள் அங்குத் தங்கிக் கிடந்தன. பின்னர்க் களையப்பட்ட தாமரை
அவற்றைச் சொரிந்தன என இத்துணையும் அடக்கிச் சுருங்கக் கூறிய அழகு
காண்க.
மன்னு
பங்கய மாநிதி - பதுமநிதி. தாமரை வடிவுடையதொருநிதி.
அது குறையாச் செல்வமுடையது. இதுபோன்று சங்கு வடிவமுள்ள சங்கநிதி
என்ற தொரு நிதியும் உண்டு. இவையிரண்டினையும் நிதிக்கிழவனாகிய
குபேரன் உடையவன் என்பது மரபு. "சங்கநிதி பதுமநிதி யிரண்டுத் தந்து"
என்பது திருத்தாண்டகம். மன்னு - எடுக்க எடுக்கக் குறையாது நிலைத்த
தன்மை குறித்தது. மாநிதி என்றதனாலும் குறையாத பெருமை குறிக்கப்பட்டது.
நிதி - நிதியுடைய தேவர். ஆகுபெயர். 2
905.
|
வளத்தி
னீடும் பதியதன் கண்வரி
யுளர்த்து மைம்பா லுடையோர் முகத்தினுங்,
களத்தின் மீதுங், கயல்பாய் வயலயற்
குளத்து, நீளுங் குழையுடை நீலங்கள் |
3 |
(இ-ள்.) வளத்தில்...முகத்தினும் - வளத்தால் நீடும் அந்தப் பதியில்
வண்டுகள் குடைகின்ற கூந்தலினையுடைய பெண்களின் முகத்திலும்; குழை
உடை நீலங்கள் நீளும் - குழையை எட்டுகின்ற நீல மலர் போன்ற
கண்கள் நீள்வன; களத்தின் மீதும் - (அவர்களுடைய) கழுத்தின் மேலும்;
குழை உடை நீலங்கள் நீளும் - குழைவாகச்
செய்யப்பட்ட
நீலமணிகளையுடைய அணிகள் விளங்குவன; கயல் பாய்....குளத்தும் - கயல்
மீன்கள் பாய்வதற்கிடமாகிய வயல்களின் பக்கத்துள்ள குளத்திலும்;
குழை
உடை நீலங்கள் நீளும் - குழைகளை உடைய நீலோற் பலங்கள் நீண்டு
படர்ந்து பூக்கும்.
(வி-ரை.)
முகத்தினும், களத்தின் மீதும், குளத்தும், குழை உடை
நீலங்கள் நீளும் என்று தனித்தனி கூட்டி முடித்துக்கொள்க.
வரி
உளர்த்தும்....முகத்தும்...நீளும் - வரி - வண்டுகள்.
உளர்த்துதல் - ஊதிக்குடைதல். ஐம்பால்
- முடி (உச்சியின் முடித்தல்),
குழல் (சுருட்டி முடித்தல்), தொங்கல் (முடிந்து தொங்க விடுதல்), பளிச்சை
(பின்னி விடுதல்), சுருள் (பின் சொருகுதலும் பல வகையாகச் சுருட்டி
முடிதலும்) என்ற ஐந்துவகையாகப் புனையப் படுதலின் கூந்தலினை ஐம்பால்
என வழங்குதல் மரபு.1
முகத்தினும்
- முகத்தினும், குறித்த ஏனையிடங்களினும் என உம்மை
எண்ணும்மை. முகத்தில் குழை உடை நீலங்கள் நீளுதலாவது
முகத்தில்
உள்ள கண்கள் காதளவு நீண்டிருத்தல். இங்குக் குழை
- காதணியையும்,
நீலம் - நீலமலர
1இந்நாளில்
இது மாறி மற்றும் பல்வேறு வகைகளாகப்
புனையப்படுதலும், ஒரு வகையாலும் புனையப்படாமல் தூங்கவிடப் படுதலும்,
குறுகத் தறித்துப் பரப்ப விடுதலும் ஆகிய வழக்குகள் புகுந்து விட்டமையின்
ஐம்பால் என்பது இடு குறியளவாய் ஒழிந்து நின்றது.
|