சுந்தரமூர்த்தி
சுவாமிகள் துதி
|
தொகை
"ஆரூர
னாரூரி லம்மானுக் காளே"
- திருத்தொண்டத்தொகை.
வகை
"அருட்டுறை யத்தற்
கடிமைப்பட் டேனினி யல்லனெனும்
பொருட்டுறை யாவதென் னே"யென்ன வல்லவன் பூங்குவளை
யிருட்டுறை நீர்வய னாவற் பதிக்கும் பிரானடைந்தார்
மருட்டுறை நீக்கிநல் வான்வழி காட்டிட வல்லவனே. (16) |
-
திருத்தொண்டர் திருவந்தாதி
விரி
வேறு
967. |
தீதுகொள்
வினைக்கு வாரோஞ் செஞ்சடைக் கூத்தர் தம்மைக்
காதுகொள் குழைகள் வீசுங் கதிர்நில விருள்கால் சீப்ப
மாதுகொள் புலவி நீக்க மனையிடை யிருகாற் செல்லத்
தூதுகொள் பவரா நம்மைத் தொழும்புகொண் டுரிமை
கொள்வார் |
1 |
துதி
:- இனி, நிறுத்த முறையானே, "இலைமலிந்த" என்று தொடங்கும்
திருத்தொண்டத்தொகைப் பாசுரத்தினுள் "ஆனாயர்க் கடியேன்" என்ற
சரிதத்துக் கடுத்து, "ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே" என்றதனுட்
போந்த, ஆரூர்ப் பெருமானுக்கு ஆளுடையநம்பிகள் ஆளாயின்
சரிதப்பகுதியினைக் கூறத்தொடங்கிய ஆசிரியர், நம்பிகளது சரிதத்தின் ஒரு
பகுதியினை உள்ளமைத்து, அவர் ஆளாந் தன்மையைக் காட்டுமுகத்தாற்
றுதியாகக் கூறுகின்றார்.
தொகை
:- (தொகை நூலின் இப்பாசுரத்திற் சொல்லப்பட்ட எறிபத்தர்
முதலாகிய ஏழு அடியார்களுக்குத் தனித்தனி அடியேன் ஆகிய) ஆரூரன்
திருவாரூர் அம்மானுக்கும் ஆள் என்று தொடர்புபடுத்திமுடிக்க. 550ல்
உரைத்தவை பார்க்க.
வகை
:- "திருஅருட்டுறையுள் எழுந்தருளிய நாதனுக்கு நான்
ஆட்பட்டேன், இனி, ஆளல்லேன் என்று சொல்லும் பொருளின் தன்மை
எவ்வாறு?" என்று திருப்பதிகத்திற் பாடியருளவல்லவர், குவளை மலர்களின்
இருள் தங்குகின்ற துறையுடைய நீர் நிரம்பிய வயல்கள் சூழ்ந்த திருநாவலூர்
என்னும் திருநகரத்திற்கும் முதல்வர்; தம்மை அடைந்தோர் தமது
மருளுடைய வழிகளை நீக்கி முத்திநெறியைக்காட்டிட வல்லவரே யாவர்.
அருட்டுறை...என்னே?
- இது, "அருட்டுறையுள் அத்தாவுனக்
காளாயினி யல்லேனென லாமே" என்ற சுந்தமூர்த்தி சுவாமிகளின் தேவார
முதற்பதிகத்திற் போந்த மகுடத்தினைக் குறித்தது. அதன் சொல்லையும்
பொருளையுமே எடுத்தாண்டு அக்கருத்தினை உரைசெய்து காட்டியவாறு.
ஆவணங் காட்டி வழக்கில் வென்றருளியபடியும், ஆகாயத்தில்தோன்றி
அறிவுறுத்தியபடியும், அத்தா!, உனக்கு நான் பண்டும் இன்றும் என்றும்
ஆளாயின படியை உணர்ந்து கொண்டேன்; இவ்வாறு உணர்த்தப்
பெறுவதற்கு முன் ‘ஆள் அல்லேன்' என மறுத்தேனே!; அச் சொற்
பொருளின் வழி இனி என்னாவது?; இனி அப்படிச்சொன்னால் அச்சொல்
பொருளுடையதாகுமோ ? என்றதாம். (பக்கம் 252 பார்க்க.)
என்ன
வல்லவன் - இறைவர் பணித்தவாறு அப்பொருள் கொண்ட
"பித்தாபிறைசூடி" என்ற திருப்பதிகம் பாடி, அதற்கேற்ப ஆளாகிப் பணி
செய்து நிற்கும் வன்மை பெற்றவர்.
பூங்குவளை
இருட்டுறை நீர் - இருள்துறை என்றும், இருட்டு உறை
என்னும் பிரித்துரைக்க நின்றது. குவளையின் நீலநிறம் இருள்செய்வதாதலின்
அவ்விருள் பொருந்திய என்க; "சுரும்பல்லி குடைநீலத் துகளல்ல
பகலெல்லாம்" (65), "பானற்குல மாமல ரிற்படர் சோதியார்" (714)
என்றவிடங்களிலுரைத்தவை
காண்க.
பதிக்கும்
- உம்மை சிறப்பும்மை. பதிக்குப்பிரான் என்று
பாடங்கொள்ளலுமாம்.
|