|
வெஞ்சமண்
பேர் எக்கர் - எக்கர் - ஈனர். "எக்க
ராமமண்
கையர்" என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரங்காண்க. உடனாக -
உடம்படுத்துவிக்க. ஆக்க என்றது ஆக என நின்றது. சிவன் பணியில்
தவிர்த்தலால் சமண்போல ஆக்க என்றதும் குறிப்பு.
வெஞ்சமண்
- வெம்மை - கொடுமை. கொல்லாமை - அகிம்சை -
சீவகாருண்ணியம் என்ற போர்வையினுள் மறைந்து நின்று கொடிய
கொலை - இம்சை - வன்மைகளில் அஞ்சாது முற்படுகின்றவர்களாதலின்
வெஞ்சமண் என்றார்.
செய்வினை
- இகழ்ந்தன அறநூல்களாலும் அறிவோராலும்
இகழப்பட்டவற்றை. செயப்பாட்டுவினையாக வந்த வினையாலணையும்
பெயர். இரண்டனுருபுதொக்கது. 15
983.
(வி-ரை.) அந்தம் இலவாம் மிறை - மிறை
- கொடுமைகள்.
"வெஞ்சமண் குண்டர்கள் செய்வித்த தீய மிறைக ளெல்லாம்" (137),
"மிண்டாய செய்கை" (141) என்ற திருநாவுக்கரசு சுவாமிகள் புராணம் காண்க.
"பெருமிறை" (குறள் -847) என்றதற்கு, மிக்க வருத்தம் - பொறுத்தற்கரிய
துன்பம் - என்று பரிமேலழகர் உரைத்தது காண்க. அந்தம்இல
-
அவ்வகைப் பெருங்கொடுமைகள் அளவில்லாதன. மிறை
என்றது அவற்றின்
பெருந்துன்பமும், அந்தம் இல என்றது அவற்றின்
பெருந்தொகையும்
குறித்தன. இவை மூர்த்தியாரது உலக வாழ்க்கை நிலையைப்பற்றிச்
செய்யப்பட்டன. இவை பொருள் வருவாயைத் தடுத்தல், கொள்ளும் பண்டம்
பெறாமற் செய்தல் முதலியன.
மிறை
செய்யவும் - பணிமுட்டலர் செய்துவந்தார் - உலக
வாழ்வில் வருவாய் முட்டுப்பாடு வறுமை - சோர்வு முதலாயின
நேர்ந்தனவாயினும், உயிரின் நல்வாழ்வுபற்றிய திருப்பணியை ஒருவாற்றானும்
தவிர்தலின்றி நியதியாகச் செய்து வந்தனர். உம்மை - உயர்வு சிறப்பு.
முந்தை
முறைமைப்பணி - 977ல் உரைத்த திருப்பணி. முந்தை -
முன்னாளில் என்பது காலத்தையும், முறைமை என்பது
செய்யும்
திறத்தையும் குறித்தன.
அன்பனார்
- மிறை செய்யினும் பணி முட்டாது செய்வதற்கு
அவரது "மூளும் அன்பே" காரணமாம் என்று குறிக்க இத்தன்மையாற்
கூறினார்.
செய்துவந்தார்
- வருநாள்போலவே பலநாளும் முட்டின்றிச் செய்தல்
குறித்தது.
தந்தம்......வல்லார்?
- இது கவிகூற்று. தந்தம் பெருமைக்கு
அளவாகிய சார்பு - தத்தமது பெருமைக் கேற்றபடி
பெரியோர்
விடாப்பிடியாகப் பற்றும் பெரும்பற்று. சார்பு -
எது வரினும் விடாதுபற்றும்
பற்றுக்கோடு. "சார்புணர்ந்து" (திருக்குறள் - 359) என்றதனுட் போந்த
பொருள்கள் காண்க. 39, 346, 361, 469ல் உரைத்தவையும், "தாள்
மெய்ப்பற்றெனப் பற்றி விடாத விருப்பின் மிக்கார்" (975) என்றதும் காண்க.
நிற்கும் - நிலைபெற்று நிற்கின்ற.
எந்தம்
பெருமக்கள் - அவர்களது திருவடிச் சார்புபற்றித், தாம்
நிற்கின்ற உரிமை பாராட்டி எந்தம் என்றார். பெருமக்கள்
- மக்களிற்
சிறந்தோர். "நீடலங்காரத்தெம்பெரு மக்க ணெஞ்சினு ணிறைந்துநின்
றானை" (சேந்தனார் - திருவீழி - 12) என்ற திருவிசைப்பாவும் காண்க.
தடுக்கவல்லார் யாவர்? ஒருவருமிலர் என்க.
வினா எதிர்மறைப்
பொருளுணர்த்தியது. தடுத்தல் - தமது சார்பில்
நிற்கவொட்டாது
தடுத்தல். 16
984.
|
எள்ளுஞ்செயல்
வன்மைக ளெல்லையில் லாத செய்யத்
தள்ளுஞ்செய லில்லவர் சந்தனக் காப்புத் தேடிக்
கொள்ளுந்துறை யும்மடைத் தான், கொடுங் கோன்மை
செய்வான்;
தெள்ளும்புனல் வேணியர்க் கன்பருஞ் சிந்தை நொந்து,
17 |
|