உருத்திரஞ்
சொல்லி அமைந்த உருத்திரபசுபதி என்றமையால்
பெயர்போந்த காரணம் அறிவித்தவாறுமாயிற்று. இதனை விரிநூல் 1039ல்
விரித்தமை காணத்தக்கது.
வயற்கே
நந்து ஆர்திருத்தலையூர் - இதனால் இவ்வூர் மருதநிலச்
சிறப்பமைந்த செழித்த நாட்டில் உள்ளதென்பதாம். இதனை "நிவந்தெழும்
பெரும்புன னீத்தம், மலர்த்த டம்பணை வயல்புகு பொன்னிநன் னாடு" 1031
என்று விரிநூல் விரித்துக் காரணத்துடன் பொருள் உரைத்தது காண்க.
பதியினைத் தலையூர் என்றுரைப்பர் என்று
கூட்டி முடிக்க. உந்தாத -
வழுவாத. "கொள்ளும் அன்பினில்" (1036) என்றது பார்க்க. நற்பதி -
நன்மையாவன இன்ன என்பதை விரிநூல் 1032 - ல் விளக்கியது காண்க.
உரைப்பர்
என்றதற்கு அறிந்தோர் என்ற எழுவாய் வருவிக்க;
உரைக்கத்தக்கவர் அவரேயாகலான்.
1031.
(இ-ள்.) வெளிப்படை. உயர்ந்து பரந்தெழுகின்ற
நீத்தமானது
மலர்த்தடங்களிலும் பெரிய வயல்களிலும் புகுகின்ற நல்ல நிலத்தில் காவிரி
நாட்டிலே, குலத்தின் ஓங்கியனவாயும், குறைவில்லாத நிறைவையுடையன
வாயும் உள்ள குடிகள் நெருங்கியிருத்தலால், ஊர்களுள் மேம்படுகின்ற
நன்மை யினையுடையது பெரிய திருத்தலையூராம்.
(வி-ரை.)
நிலத்தின் ஓங்கிய நாட்டு என்க. ஓங்குதல்
- பெருமையிற்
சிறத்தல். உலகில் எல்லா நாடுகளுள்ளும் சிறந்த நாடு என்பதாம்.
நிலத்தின்
ஓங்கிய பொன்னி என்று கூட்டிக் காவிரிக்குச் சிறப்பாக்கி உரைப்பினும்
அமையும். இப்பொருளில் காவிரி ஏனைய ஆறுகளினும் சிறந்தது என்பதாம்.
இதுபற்றித் திருநாட்டுச் சிறப்பிற் கூறியவை பார்க்க. நாட்டுச் சிறப்பாகப்
பொருள் கொள்ளும்போது, காவிரி பெருகித் தடங்களிலும் வயல்களிலும்
புகுதலால் என்று காரணங்காட்டினார் என்க.
நிவந்து
எழும் பெரும்புனல் நீத்தம் - நிவந்து எழும் என்றதனால்
காவிரி பெருகும்போது அகன்று மிகப் பரந்து கிளம்பும் தன்மையும்,
பெரும்புனல் என்றதனால் அது மேலோங்கி உயரும்
தன்மையும், நீத்தம்
என்றதனால் வேகமாய்ச் செல்லும் தன்மையும் குறிக்கப்பட்டன. அகலமும்
ஆழமுமிருப்பினும் வேகமாய்ச் செல்லாத கோதாவரிபோன்ற ஆறுகளும்
உண்டு.
நீத்தம்,
மலர்த்தடங்களிலும், பணைவயல்களிலும் புகும் என்று
உருபு விரித்துரைக்க. முன்னுரைகாரர்கள் தாமரைகளை யுடைய வயல்களிற்
புகும் என்றுரைத்தனர்.
புகுபொன்னி
- வெள்ளம் வரும்போது மக்களின் பெருமுயற்சியின்றித்
தானாகவே, அங்கங்குள்ள தடம் முதலிய நீர்நிலைகளினும், வயல்களினும்
சென்று நிறைகின்ற காவிரியின் இயல்பு குறித்தது. "வயலுட்புக" (60) என்றது
பார்க்க.
பொன்னி
நல் நாட்டுத் - திருத்தலையூர் - நலத்தது என்று
கூட்டிமுடிக்க. நாட்டுத் தலத்தின் மேம்படு என்று கூட்டி உரைத்தலுமாம்.
நன்மை என்றது இயற்கையடைமொழி. பொன்னி
வருகின்ற வழியில்
அதனாற் பயன்பெறாமலும் நோய்க்கிருப்பிடமாகவும் உள்ள நலமில்லா
நாடுகளும் சிலவுள ஆதலின், அவற்றினின்றும் பிரித்து, அதன் பயன்பெற்ற
நன்மையுடைய என்று கொண்டு பிறிதினியைபு நீக்கிய விசேடணமாக
வுரைப்பினும் அமையும்.
குலத்தின்....குடி
- குலத்தின் ஓங்குதல் - "இருவர்ச்
சுட்டிய
பல்வேறு தொல்குடி" என்றபடி தாய் தந்தை என்ற இருவர் மரபும் தூயவாய்
வழிவழி நீண்ட காலமாய் வருதல்.
|