மேற்கில் உள்ளது
ஆதனூர். கருப்பறியலூரில் (மேலைக்காழி - தலைஞாயிறு)
இருந்து தென் மேற்கில் 3 நாழிகையளவில் மட்சாலை வழியாலும்,
ஓமாமபுலியூரிலிருந்து மேற்கு 2 நாழிகையளவில் அணைக்கரை வழியாலும்
அடையலாம்.
2.
திருப்புன்கூர் - 261ல் உரைத்தவை பார்க்க.
3.
திருத்தில்லை - ஓமகுளம். நந்தனார் மூழ்கி எழுந்த இடம்.
நடராசர் கோயிலுக்குத் தென்மேற்கில் உள்ளது. இங்கு நந்தனாருக்குக்
கோயில் உண்டு,
கற்பனை
:- 1. வயல் வளமும், துடவை (தோட்ட நிலம்) வளமும்
பெருந்திருவாவன. இவ்வளங்களால் பொலிவது மாடங்களின் சிறப்பு.
2.
ஊரில் குடிநெருங்கினால் அதன் அடிப்பக்கத்து அயலிடை வேறு
இடம் (Extensions) நெருங்கக் கூடிபுகுவது இயல்பு.
3.
உழுதொழிற் கிழமையுடைய புலைமக்கள் வாழும் புலைப்பாடி
ஊரின் புறத்துப் புறம்பணையில் வயல்களின் பக்கம் அமைவது முன்னாள்
நகர அமைப்பு.
4. புலைச்சேரி,
சுரைபடர்ந்த பழங்குடிசைகளால் நிறைவதாம். புலையர்
கோழியும் நாயும் வளர்ப்பர். புலைச்சியர் பாட்டுப்பாடி நெற்குத்துவர்.
பறைகொட்டுதற் கிசையக் களிதூங்க ஆடுவர். புலையரின் பறைத்
தொழிலுக்கு மானியம் உண்டு.
5. பிறந்து உணர்வு
தொடங்கியது முதல் சிவன் பத்தியில் மனஞ்சென்று
வேறு நினைவின்றி வருதல் முன்பிறவியில் விளைத்த உண்மையன்
பின் பரிசினால் ஆவது.
6.
தத்தம் குலமரபு பிழையாது நின்றே சிவன்பால் பத்திசெய்யலாம்.
7.
புலையர் மரபில் வந்து சிவத்தொண்டு செய்வோர்
புறத்தொண்டர்கள் எனப்படுவர். திருக்கோயிற்
புறத்து நின்று அன்புடன்
கும்பிட்டு ஆடியும் பாடியும் வழிபாடு செய்தலும், பேரிகை முதலிய
முகக்கருவிகளுக்குப் போர்வைத்தோலும் விசிவாரும், யாழுக்கும்
வீணைக்கும் தந்திரியும், அர்ச்சனைக்குக் கோரோசனையும் தருவதும்
இவர்கள் செய்யும் திருத்தொண்டுகளாம். இவர்கள் திருக்குளம் தோண்டி
அமைத்தற்கும் உரியர்.
8. அன்பர்க்கு
நேரே தம்மைக் காட்டுதற்கு இடபதேவரையும் விலகச்
செய்து பரமகருணாநிதியாகிய சிவபெருமான் காட்சி கொடுப்பார்.
9. குலநலம்
மரபு முதலிய ஒழுக்கத்தையும் நிலையினையும்
உளங்கொண்ட நிலையிலுள்ளோர் அதுபற்றி விதித்த தருமங்களின்படி
நடத்தல் வேண்டும்.
10.
குலவொழுக்கத்தின் வரம்புபற்றிய எண்ணமுடையார்க்கு
அவ்வொழுக்கத்தினின்றே அந்த வேறுபாடுகளைத் தக்கபடி போக்குவித்து
அருள்புரிவர் இறைவர்.
11.
தீக்குளித்தல் குலமரபின் வந்த உடல் இழிவுபற்றிய நினைவுகளைத்
தூய்மையாக்கவல்லது.
12. திருக்கோயிலின் முன்பு நின்று ஆடுதலும் பாடுதலும் அன்பின்
மிகுதியினால் உண்டாகும். நந்தனார் இவ்வாறு கோயில்களின் முன்
ஆடினர்; பாடினர். இறைவர் சந்நிதியில் இவர் கையில் நரம்பிசைக்கருவி
யாழ்வைத்துக்கொண்டு உட்கார்ந்து பாடும் திருக்கோலம் திருப்புன்கூரில்
உள்ளது. (படம் பார்க்க). இது பற்றியே "இசைத் தமிழ் நூல்வல்லோர்,
பவமணுகாத் திருநாளைப் போவாரா னாயர் பாணர் பரமனையே பாடுவா
ராக நால்வர்" என்று இவரை இசைத்தமிழ் வல்லராக வகுத்தனர் உமாபதி
சிவாச்சாரியார் (திருத்தொண்டர் புராண வரலாறு 36)
|