குளிர்ந்த கொத்துக்களையுடைய
கொன்றைகள் பொன் சொரிவன; நீர்மிகுந்த
கால்வாய்கள் வயலிடங்களில் உள்ள வண்டலில் முத்துக்களைச் சொரிவன;
கடற்பாலில் தாழைகளை முன்னிடங்களிற் கொண்ட துறைகளில் கலங்கள்
யானைகளைக் கொணர்ந்து சொரிகின்றன.
(வி-ரை.)
கொண்டல் மணி சொரிவன - முத்துக்கள் பிறக்கும்
இடங்களுள் மேகமும் ஒன்றாமென்பர்; ஆதலின் மேகங்கள் மலையுச்சியில்
பெய்யும்போது முத்துக்களையும் சொரிந்தன என்றார். மணி என்பதற்கு
மணிபோன்ற மழைத்துளி என்று கொண்டுரைத்தலுமாம். கடலில் இப்பியின்
அகட்டில் மழைத்துளி வீழ்ந்தால் அதுவே முத்தாகத் தரித்து விளைவதாம்
என்பதும் இங்குக் கருதத்தக்கது.
குலவரை - நீண்டு உயர்ந்த பெருமலைகள். கொண்டல்மணி
-
குறிஞ்சிக் கருப்பொருள். பால் - ஏழனுருபு. பகுதியுமாம்.
துணர்க்
கொன்றை பொன் சொரிவன - கொன்றையின் இதழ்கள்
பொற்காசுபோல உதிர்வன என்பது கருத்து. "விரைசேர்பொன் னிதழிதர"
(மேகரா - குறி - திருவீழி - 4) என்ற திருஞானசம்பந்த நாயனார்
தேவாரங்கள் காண்க.
தளவு
அயல் - முல்லைநிலப் பக்கம். தளவு - முல்லை.
இங்கு
நிலமும் மலரும் குறித்தது. இவை முறையே முல்லையின் முதற்பொருளும்
கருப்பொருளுமாம். முல்லை நிலத்தில் கொன்றையும் முல்லையும் மலர்வன
என்பதாம்.
வண்டல்
- எருப்பகுதி நிறைந்த சேறு. "திருமேனி வெண்ணீற்று
வண்டலாட" முதலிய ஆட்சிகள் காண்க.
நீர்மண்டு
கால் வண்டல் முத்தம் சொரிவன என்க. வண்டல்
முத்தம் - என்பதற்குச் சிறுமகளிர் வண்டலாட்டயர்ந்து
விளையாடிச் சிந்திய
முத்துக்கள் என்றுரைப்பாருமுண்டு. இப்பொருளில் வண்டல்
- சிறுமியர்.
விளையாட்டினொன்று. "வண்டல்பயில் வனவெல்லாம்" (காரைக் - புரா - 5).
வயல் - மருதநிலப்பகுதி.
கண்டல்
- தாழை. இது நெய்தனிலக் கருப்பொருள்.
கலம்
துறைக் கரி சொரிவன என்க. அயல் நாட்டு யானைகளை
மரக்கலங்கள் ஏற்றிக் கொணர்ந்து துறைமுகத்திற் சேர்ப்பன என்றபடி.
யானையேற்றிவரத்தக்க பெருமரக்கலங்களும் அத்தகைய கடல் வாணிபமும்
இருந்தன என்பதாம். கலஞ்சொரிந்த கரிக்கருங்கன்றும்" (வாயிலார் புரா - 3)
என்பதும் காண்க.
இப்பாட்டினால்
நானிலப் பகுதியின் கருப்பொருள்களும் வளங்களும்
முறையே கூறியதாயிற்று. 8
1086.
|
தேனி
றைந்தசெந் தினையிடி தருமலைச் சீறூர்;
பானி றைந்தபுற் பதத்தன முல்லைநீள் பாடி;
தூநெ லன்னநெய் கன்னலின் கனியதண் டுறையூர்;
மீனி றைந்தபே ருணவின வேலைவைப் பிடங்கள். |
9 |
(இ-ள்.)
வெளிப்படை. குறிஞ்சிக்குரிய சீறூர்கள்
தேன் நிறையக்
கலந்த செந்தினை மாவை யுடையன; முல்லைக்குரிய நீண்ட பாடிகள் பால்
சேர்த்து அடப்பட்ட புல்லரிசிச் சோற்றையுடையன; மருத நிலத்தின் குளிர்ந்த
துறைகளையுடைய ஊர்கள் தூய நெல்லரிசியன்னமும்
நெய்யும் கரும்பும்
இனிய கனிகளும் என்றிவற்றையுடையன; நெய்தற் பகுதியாகிய
கடலைச்சார்ந்த இடங்கள் மீன்கள் நிறைந்த பேருணவினையுடையன.
(வி-ரை.)
இப்பாட்டினால் நானிலக் கருப்பொருள்களின் ஊர்களையும்
உணாவினையும் கூறினார். உணவினைக் கூறியவாற்றால் அவ்வுணவு பெறும்
வகையிற் செய்யப்படும்
|