பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1541

 

  20. சண்டேசுர நாயனார் புராணம்

                            

தொகை

"மெய்ம்மையே திருமேனி வழிபடா நிற்க,
வெகுண்டெழுந்த தாதைதாண் மழுவினா லெறிந்த
வம்மையா னடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்"

                    - திருத்தொண்டத் தொகை

                             

வகை

"குலமே றியசேய்ஞ லூரிற் குரிசில் குரைகடல்சூழ்
தலமே றியவிறற் றண்டிகண் டீர்தந்தை தாளிரண்டும்
வலமே றியமழு வாலெறிந் தீசன் மணிமுடிமே
னலமே றியபால் சொரிந்தலர் சூட்டிய நன்னிதியே"

               
- திருத்தொண்டர் திருவந்தாதி - 22.

                              

விரி

1206.







பூந்தண் பொன்னி யெந்நாளும் பொய்யா தளிக்கும்
                                 புனனாட்டு
     வாய்ந்த மண்ணித் தென்கரையின் மன்ன,
                          முந்நாள்,
வரைகிழிய
ஏந்து மயில்வே னிலைகாட்டி, யிமையோ ரிகல்வெம்
                                  பகைகடக்கஞ்,
     சேந்த னளித்த திருமறையோர் மூதூர் செல்வச்
                                     சேய்ஞலூர். 
 1

     புராணம் :- சண்டேசர் என்னும் பெயருடைய நாயனாரது
சரிதவரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி நிறுத்த முறையானே
மும்மையாலுலகாண்ட சருக்கத்து ஆறாவது சண்டேசுர நாயனார் புராணங்
கூறத்தொடங்குகிறார்.

     தொகை :- மெய்ம்மையுள் நின்று மணலாலாகிய சிவலிங்கத்
திருமேனியின் கண் சிவனை வழிபட்டு நிற்கவும், அதுகண்டு வெகுண்டு
எழுந்த தாதையின் தாள்களை மழுவினால் எறிந்த அம்மைபோன்ற
திருவடிப்பற்று மிகுந்த சண்டேசருக்கும் நான் அடியேனாவேன்.

     திருமேனியில் மெய்ம்மையே வழிபடா நிற்க என்க.
திருமேனி -
மணலாலாக்கிய சிவலிங்கத் திருமேனியினிடத்து;
சிவனைக்கண்டு வழிபடத்தக்க குரு, லிங்க, சங்கமம் என்ற மூன்று
திருமேனிகளில் இலிங்கமாகிய திருமேனியில் என்க. திருமேனியின் கண்
வழிபட என்பதாம். ஏழனுருபு தொக்கது. வழிபடாநிற்க - அவன் (தந்தை)
பார்த்துக்கொண்டிருப்பவும், புடைத்துக்கொடிதா மொழி கூறவும், தாம்
பணியிற் சலியாது முயன்றுகொண்டிருக்க என்ற சரிதக்குறிப்பு. வழி
படாநிற்கவும்,
என்று சிறப்புமை தொக்கது. அவர் வழிபட்ட நிலை
பிறரறியவாராது நின்றதாதலின் உம்மையும் தொக்கு நின்றது. இந்நாயனார்
அந்த வுடம்பு தன்னுடனே அரனார் மகனாராகிச் சண்டேச பதத்தில்
அமர்ந்து இன்றும் சிவயோகத்தில் எழுந்தருளி வழிபட்டு நிற்கின்றாராதலின்,
வழிபடாநிற்க என்று நிகழ்காலத்தாற் கூறிய உண்மையும் காண்க. திருமேனி
- நாயனாரது திருமேனி குறித்ததாகக்கொண்டு அதற்குத்தக்க
வுரைப்பாருமுண்டு.