சேர்க்கை II
சண்டேசுர
நாயனாரைப்பற்றிய
சைவத் தெய்வத் திருமுறைத் திரட்டு ஆளுடைய பிள்ளையார்
முதல்
திருமுறை திருச்சேய்ஞலூர்
பண் - பழந்தக்கராகம்
பீரடைந்த
பால தாட்டப் பேணா தவன்றாதை
வேரடைந்து பாய்ந்த தாளை வேர்தடிந் தான்றனக்குத்
தாரடைந்த மாலை சூட்டித் தலைமை வகுத்ததென்னே?
சீரடைந்த கோயின் மல்கு சேய்ஞலூர் மேயவனே. (7) |
திருக்கோளிலி பண் - பழந்தக்கராகம்
வந்தமண
லாலிலிங்க மண்ணியீன்கட் பாலாட்டுஞ்
சிந்தைசெய்வோன் றன்கருமந் தேர்ந்துசிதைப் பான்வருமத்
தந்தைதனைச் சாடுதலுஞ் சண்டீச னென்றருளிக்
கொந்தணவு மலர்கொடுத்தான் கோளிலியெம் பெருமானே. (4) |
திருவூறல்
பண் - வியாழக்குறிஞ்சி
எண்டிசை
யோர்மகிழ வெழின் மாலையும் போனகழம் பண்டு
சண்டி தொழுவளித்தா னவன் றாழுமிடம் வினவிற்
கொண்டல்கள் தங்குபொழிற் குளிர் பொய்கைகள் சூழ்ந்துநஞ்சை
யுண்டபி ரானமருந் திரு வூறலை யுள்குதுமே. (5) |
இரண்டாந்
திருமுறை திருப்புள்ளிருக்குவேளூர் பண் - சீகாமரம்
கீதத்தை
மிகப்பாடு மடியார்கள் குடியாகப்
பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலுமிடம்
1வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாகப்
போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளுரே. (5) |
மூன்றாந் திருமுறை திருப்பாசுரம் பண் - கௌசிகம்
கடிசேர்ந்த
போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலை யறவெட்டிட முக்கண் மூர்த்தி
யடிசேர்ந்த வண்ண மறிவார்சொலக் கேட்டு மன்றே. (7)
|
திருவேட்டக்குடி
பண் - பஞ்சமம்
தோத்திரமா
மணலிலிங்கந் தொடங்கியவா னிரையீன்பால்
பாத்திரமா வாட்டுதலும் பரஞ்சோதி பரிந்தருளி
ஆத்தமென மறைநால்வர்க் கறம்புரிநூ லன்றுரைத்த
தீர்த்தமல்கு சடையாருந் திருவேட்டக் குடியாரே. (3)
|
1 இங்கு இது
இத்தல சம்பந்தமான வேறுமொரு சரிதங் குறித்ததென்றும்
கொள்வர்.
|