திருவாலவாய்
- திருவியமகம் பண் - பழம்பஞ்சுரம்
சென்று
தாதை யுகுத்தனன் பாலையே சீறி யன்பு செகுத்தனன்
பாலையே
வென்றி சேர்மழுக் கொண்டுமுன் காலையே வீட வெட்டிடக்
கண்டுமுன் காலையே
நின்ற மாணியை யோடின கங்கையா னிலவ மல்கி யுதித்தன
கங்கையால்
அன்று நின்னுரு வாகத் தடவியே யால வாயர னாகத் தடவியே. (5) |
ஆளுடைய அரசுகள்
நான்காந்திருமுறை
திருவாப்பாடி பண் - திருநேரிசைக்கொல்லி
அண்டமா
ரமரர் கோமா னாதியெம் மண்ணல் பாதங்
கொண்டவன் குறிப்பி னாலே கூப்பினான் தாப ரத்தைக்
கண்டவன் றாதை பாய்வான் காலற வெறியக் கண்டு
சண்டியார்க் கருள்கள் செய்த தலைவராப் பாடி யாரே. (4) |
திருக்குறுக்கைவீரட்டம்
பண் - திருநேரிசைக்கொல்லி
தழைத்ததோ
ராத்தி யீன்கீழ்த் தாபர மணலாற் கூப்பி
யழைத்தங்கே யாவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு
பிழைத்ததன் றாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக்
குழைத்ததோ ரமுத மீந்தார் குறுக்கைவீ ரட்ட னாரே. (3) |
திருச்சாய்க்காடு
பண் - திருநேரிசைக்கொல்லி
ஆமலி பாலு நெய்யு
மாட்டியர்ச் சனைகள் செய்து
பூமலி கொன்றை சூட்டப் பொறாததன் றாதை தாளைக்
கூர்மழு வொன்றா லோச்சக் குளிர்சடைக் கொன்றை மாலைத்
தாமநற் சண்டிக் கீந்தார் சாய்க்காடு மேவி னாரே. (6) |
திருச்சேறை
பண் - திருநேரிசைக்கொல்லி
நிறைந்தமா
மணலைக் கூப்பி நேசமோ டாவின் பாலைக்
கறந்துகொண் டாட்டக் கண்டு கறுத்ததன் றாதை தாளை
யெறிந்தமா ணிக்கப் போதே யெழில்கொள்சண் டீச னென்னச்
சிறந்தபே ரளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வ னாரே.
(5) |
ஐந்தாந்திருமுறை
கோயில் திருக்குறுந்தொகை
மாணி
பால்கறந் தாட்டி வழிபட
நீணு லகெலா மாளக் கொடுத்தவன்
ஆணி யைச்செம்பொ னம்பலத் துண்ணின்ற
தாணு வைத்தமி யேன்மறந் துய்வனோ. (4) |
திருக்கொண்டீச்சரம்
திருக்குறுந்தொகை
கண்ட
பேச்சினிற் காளையர் தங்கள்பான்
மண்டி யேச்சுணு மாதரைச் சேராதே
சண்டி யீச்சுர வர்க்கருள் செய்தவக்
கொண்டி யீச்சுர வன்கழல் கூறுமே. (1) |
|