திருமங்கலக்குடி
வண்டு
சேர்பொழில் சூழ்மங் கலக்குடி
விண்ட தாதையைத் தாளற வீசிய
சண்ட நாயக னுக்கருள் செய்தவன்
துண்ட மாமதி சூடிய சோதியே. (8) |
ஆறாந் திருமுறை
திருப்பூவணம் திருத்தாண்டகம்
ஆங்கணைந்த
சண்டிக்கு மருளி யன்று
தன்முடிமே லலர்மாலை யளித்த றோன்றும்
பாங்கணைந்து பணிசெய்வார்க் கருளி யன்று
பலபிறவி யறுத்தருளும் பரிசுந் தோன்றும்
கோங்கணைந்த கூவிளமு மதமத் தம்முங்
குழற்சுணிந்த கொள்கையொடு கோலந் தோன்றும்
பூங்கணைவே ளுருவழித்த பொற்புத் தோன்றும்
பொழிறிகழும் பூவணத்தெம் புனித னார்க்கே. (10)
|
ஆளுடைய
நம்பிகள்
ஏழாந் திருமுறை திருக்கலயநல்லூர் பண் - தக்கராகம்
இண்டைமலர்
கொண்டுமண லிலிங்கம தியற்றி
யீனத்தாவின் பாலாட்ட விடறியதா தையைத்தான்
துண்டமிடு சண்டியடி யண்டர்தொழு தேத்தத்
தொடர்ந்தவனைப் பணிகொண்ட விடங்கனதூர் வினவின்
மண்டபமுங் கோபுரமு மாளிகைசூ ளிகையு
மறையொலியும் விழவொலியு மறுகுநிறை வெய்திக்
கண்டவர்கண் மனங்கவரும் புண்டரிகப் பொய்கைக்
காரிகையார் குடைந்தாடுங் கலயநல்லூர் காணே. (3) |
திருப்புன்கூர்
பண் - தக்கேசி
ஏத
நன்னில மீரறு வேலி யேயர் கோனுற்ற விரும்பிணி
தவிர்த்துக்
கோத ளங்களின் பால்கறந் தாட்டக் கோல வெண்மணற்
சிவன்றன்மேற் சென்ற
தாதை தாளற வெறிந்தசண் டிக்குன் சடைமி சைமல
ரருள்செயககண்டு
பூத வாளிநின் பொன்னடி யடைந்தேன் பூம்பொ ழிற்றிருப்
புன்கூருளானே.(3) |
திருவீழிமிழலை
பண் - சீகாமரம்
எறிந்த
சண்டி யிடந்த கண்ணப்ப னேத்து பத்தர்கட்
கேற்ற நல்கினீர்
செறிந்த பூம்பொழிற்றேன் றுளிவீசுந் திருமிழலை
நிறைந்த வந்தணர் நித்த நாடொறு நேசத் தாலுமைப் பூசிக்
குமிடம்
அறிந்து வீழிகொண்டீ ரடியேற்று மருளுதிரே. (6)
|
|