பக்கம் எண் :


சண்டேசுரநாயனார்புராணம்1623

 

                     ஆளுடைய அடிகள்
       எட்டாந் திருமுறை திருவாசகம் திருத்தோணோக்கம்

தீதில்லை மாணி சிவகருமஞ் சிதைத்தானைச்
சாதியும் வேதியன் றாதைதனைத் தாளிரண்டும்
சேதிப்ப வீசன் றிருவருறாற் றேவர் தொழப்
பாதகமே சோறு பற்றினவா தோணோக்கம்.       (7)

                      சேந்தனார்
          ஒன்பதாந் திருமுறை பண் - பஞ்சமம்
        திருவிசைப்பா - திருப்பல்லாண்டு - கோயில்

தாதையைத் தாளற வீசிய சண்டிக்கு மண்டத் தொடுமுடனே
பூதலத் தோரும் வணங்கப் பொற்கோயிலும் போனகமு மருளிச்
சோதி மணிமுடித் தாமமு நாமமுந் தொண்டர்க்குநாயகமும்
பாதகத் துக்குப் பரிசுவைத் தானுக்கே பல்லாண்டு கூறுதுமே.
(10)

                  திருமூலதேவ நாயனார்
         பத்தாந் திருமுறை திருமந்திரம் (2-ம் தந்திரம்)

உறுவ தறிதண்டி யொண்மணற் கூட்டி
யறுவகை யானைந்து மாட்டத்தன் றாதை
செறுவகை செய்து சிதைப்ப முனிந்து
மறுமழு வால்வெட்டி மாலைபெற் றானே.     
      (15)

                       நக்கீரர்
    பதினோராந் திருமுறை கைலைபாதிகாளத்திபாதி யந்தாதி


வந்தமர ரேத்து மடைகூழும் வார்சடைமேற்
கொந்தவிழு மாலை கொடுத்தார்கொல் - வந்தித்து
வாலுகுத்த வண்கயிலைக் கோனார்தம் மாமுடிமேற்
பாலுகுத்த மாணிக்குப் பண்டு.                  (31)

                     கோபப்பிரசாதம்

...மானுடனாகிய சண்டியை, வானவ னாக்கியும்.......
                                          (10 - 11)

            போற்றித் திருக்கலிவெண்பா ........மட்டித்து

வாலுகத்தா னல்லிலிங்க மாவகுத்து மற்றதன்மேற்
பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி - மேலுகைத்தங்
கோட்டியவன் றாதை யீருதா ளெறிந்துயிரை
வீட்டிய சண்டிக்கு வேறாக - நாட்டின்கட்
பொற்கோயி லுள்ளிருத்திப் பூமாலை போனகமு
நற்கோல மீந்த நலம்போற்றி - .............         
(19 - 22)