1219.
|
நன்றி
புரியு மவர்தம்பா னன்மை மறையின் றுறைவிளங்க
என்று மறையோர் குலம்பெருக வேழு புவனங் களுமுய்ய
மன்றி னடஞ்செய் பவர்சைவ வாய்மை வளர மாதவத்தோர்
வென்றி விளங்க வந்துதயஞ் செய்தார் விசார சருமனார். (12) |
|
|
1242.
|
பெருமை
பிறங்குஞ் சேய்ஞலூர்ப் பிள்ளை யார்த முள்ளத்தில்
ஒருமை நினைவா லும்பர்பிரா னுவக்கும் பூசை யுறுப்பான
திருமஞ் சனமே முதலவற்றிற் றேடா தனவன் பினினிரப்பி
வருமந் நெறியே யர்ச்சனைசெய் தருளி வணங்கி
மகிழ்கின்றார். (37) |
|
|
1261.
|
அண்டர்
பிரானுந் தொண்டர்தமக் கதிப னாக்கி யனைத்துநாம்
உண்ட கலமு முடுப்பனவுஞ் சூடு வனவு முனக்காகச்
சண்டீ சனுமாம் பதந்தந்தோ மென்றங் கவர்பொற்றடமுடிக்குத்
துண்ட மதிசேர் சடைக்கொன்றை மாலை வாங்கிச்
சூட்டினார்.
(56) |
|
|
1262.
|
எல்லா
வுலகு மார்ப்பெடுப்ப வெங்கு மலர்மா ரிகள்பொழியப்
பல்லா யிரவர் கணநாதர் பாடி யாடிக் களிபயிலச்
சொல்லார் மறைக டுதிசெய்யச் சூழ்பல் லியங்க ளெழச்சைவ
நல்லா றோங்க நாயகமா நங்கள் பெருமான்
றொழுதணைந்தார். (57) |
|
|
1264.
|
வந்து
மிகைசெய் தாதைதாண் மழுவாற் றுணித்த மறைச்சிறுவர்
அந்த வுடம்பு தன்னுடனே யரனார் மகனா ராயினார்;
இந்த நிலைமை யறிந்தாரா? ரீறி லாதார் தமக்கன்பு
தந்த வடியார் செய்தனவே தவமா மன்றோ சாற்றுங்கால்! (59) |