மனாதிகளுக்
கெட்டாத பரமா னந்த
வாழ்வினையங் கோரிலிங்க
மணலாற் கூப்பித்
தனாதிதயந் தனினின்றுந் தாபித் தான்பா
றழைத்தவன்பா லாட்டவந்து தடுக்கத் தாதை
யெனாதவன்ற னிருபதமு மழுவாற் றுண்டித்
திகழ்ந்தவனைப் பரபதத்து ளிருத்தித் தானும்
பினாகியரு ளடைந்தவிறற் சண்டே சன்றாள்
பிரசமல ரிறைத்திறைஞ்சிப் பரசு வாமே. (12)
|