சுந்தரமூர்த்தி
நாயனார் துதி |
தொகை
"ஆரூர
னாரூ ரிலம்மானுக் காளே"
- திருத்தொண்டத்தொகை
வகை
"நிதியார்
துருத்திதென் வேள்விக் குடியாய் நினைமறந்த
மதியேற் கறிகுறி வைத்த புகர்பின்னை மாற்றி" டென்று
துதியா வருள்சொன்ன வாறறி வாரிடைப் பெற்றவன்கா
ணதியார் புனல்வய னாவலர் கோனென்னு நற்றவனே" |
-
திருத்தொண்டர் திருவந்தாதி -(23)
விரி
1265.
|
நேச
நிறைந்த வுள்ளத்தா னீலநிறைந்த மணிகண்டத்
தீச னடியார் பெருமையினை யெல்லா வுயிருந்
தொழவிடுத்துத்
தேச முய்யத் திருத்தொண்டத் தொகைமுன் பணித்த
திருவாளன்
வாச மலர்மென் கழல்வணங்க வந்த பிறப்பை
வணங்குவாம். 60 |
துதி
:- இனி, நிறுத்த முறையானே, "மும்மையா லுலகாண்ட" என்று
தொடங்கும் திருத்தொண்டத்தொகை மூன்றாவது பாசுரத்தினுள்,
"அடிச்சண்டிப் பெருமானுக் கடியேன்" என்ற சரிதத்துக்கடுத்து, "ஆரூர
னாரூரி லம்மானுக் காளே" என்றதனுட் போந்தபடி ஆரூர்ப் பெருமானுக்கு
ஆளுடையநம்பிகள் ஆளாயின சரிதப் பகுதியைக் கூறத்தொடங்கிய
ஆசிரியர், நம்பிகளது சரிதத்தின் மற்றொரு பகுதியினை உள்ளமைத்து,
ஆளாந்தன்மையைக் காட்டும் முகத்தால் நம்பிகளின் துதியாகக் கூறுகின்றார்.
தொகை
:- (தொகைநூலுள் "மும்மையா லுலகாண்ட" என்று
தொடங்கும் இப்பாசுரத்திற் றுதிக்கப்பட்ட ஆறு ஆடியார்களுக்குத்
தனித்தனி அடியேனாகிய) ஆரூரன், திருவாரூர் அம்மானுக்கும் ஆள் என்று
முடிக்க. முன்னிரண்டு சருக்கங்களின் இறுதியில் (550 - 967) உரைத்தவை
பார்க்க. ஆரூரில் அம்மானுக் காளேயாகிய ஆரூரன் முன் சொன்ன ஆறு
அடியவர்களுக்கும் தனித்தனி அடியேனாவேன் என்று கூட்டி முடித்தலுமாம்
வகை
:- செல்வம் பொருந்திய துருத்தியும் தென் வேள்விக்குடியும்
என்ற தலத்தில் எழுந்தருளி இனிது வாழும் முதல்வரே! உம்மைமறந்த
நினைவுடைய எனக்கு அம்மறதியைமாற்றி நினைப்பூட்டும் வகையால் என்
உடம்பினில்வைத்த அடையாளங்களாகிய பிணியின் தன்மைகளைப், பின்னை
மாற்றியருள்வீராக!" என்று துதித்துச், சொன்னவாறறிவார் என்ற
திருநாமமுடைய அம்முதல்வரிடம் அவ்வாறே அருளைப்பெற்றவர், ஆற்றின்
நிறைந்த நீர்பாயும் வயல்சூழ்ந்த திருநாவலூரர் என்னும் நல்ல
தவத்தினையுடையவரேயாவர்.
நிதியார்
துருத்தி தென்வேள்விக் குடியாய் - திருத்துருத்தியும்
திருவேள்விக் குடியும் சேர்ந்து ஒரேதலமாகக் கணிக்கப்பெறுவதும் மரபு.
சொன்னவாறறிவார் என்பது இத்தலத்தின்
இறைவரது பெயர். "சொன்ன
வாறறிவார் துருத்தியார் வேள்விக் குடியுளார்" என்று இதனை, நம்பிகள்
"மின்னுமா மேகங்கள்" என்னும் இத்தலத் தேவாரத்தில் முதற் பாசுரத்திற்
போற்றியருளினர். ஆளுடைய
|