என்றே தெரியா வகை
மறைந்தனர் என வீரச்சுவை நீங்க நகைச் சுவைபடக்
கூறியவாறு. இறந்தவரினும் ஓடினார் கொடியரென்பார் குற்றம்போல் என்றார்
என வுரைப்பாருமுண்டு.
நிலைப்பட்ட
மெய்யுணர்வு - மெய்யுணர்வு - உண்மைப் பொருள்
உணரும் உணர்வு. ஞானமென்ப. வீட்டிற்கு நிமித்தமாகிய செம்பொருளைக்
காண்பதுவே மெய்யுணர்வாம். அஃதாவது அருட்கண்ணாகிய
சிவஞானத்தால் விளங்கிச் சிவம் - உயிர் - பாசம் என்ற பொருளைக் காணும்
மெய்யுணர்வாம். அவ்வகை உணர்வின் முன்னர் ஆர்வம் முதலிய குற்றங்கள்
முனைந்து நிற்கலாற்றாது காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத்துய் போலவும்,
ஒளியின்முன் இருள் போலவும் ஒழிந்துபோம், இவைகளைச் "சார்புணர்ந்து
சார்புகெட", "மூன்றன் நாமம்கெட" என்ற திருக்குறட் பாக்களின் கீழ்க் கண்டு
கொள்க. மெய்யுணர்வின் இயல்பும், ஆர்வம் முதற்குற்றங்களி னியல்பும்,
மெய்யுணர்வின் முன் குற்றம் நில்லாத இல்பும் ஞான சாத்திரங்களுட் காண்க.
நிலைப்பட்ட - "கல் லெறியப் பாசி கலைந்து
நன்னீர் காணுதல்போல"
அப்போதைக்குக் காணப்பட்டு மறையும் உணர்வாயின், அது பின்னர்
அப்பாகத்தால் மறைக்கப்படுமாதலின், அவ்வாறல்லாது குற்றங்கள் அறவே
ஒழியுமாறு நிலை நின்ற மெய்யுணர் வென்பார் நிலைப்பட்ட
என்று
சிறப்பித்தார். "இடையறாத ஞான யோகங்களின் முன்னர் இக்குற்றங்கள்
மூன்றும் காட்டுத் தீ முன்னர் பஞ்சுத்துய் போலுமாதலின்" என்றார்
பரிமேலழகர். நிலைப்பட்ட மெய்யுணர்வாவது திருவடி
மறவாதிருத்தல்.
"மறக்குமா றிலாத வென்னை" (பண் - நட்ட ராகம் - திருவிராகம் -
திருத்துருத்தி - 5) என்ற ஆளுடைய பிள்ளையார் தேவாரமும், "பண்டு
திருவடி மறவாப் பான்மையோர்" (திருஞான - புரா - 55) என்ற புராணமும்
முதலிய திருவாக்குக்களிற் குறித்த நிலை இது.
ஆர்வம்
முதல் குற்றம் - இவை காமம் - வெகுளி - மயக்கம் என்ற
மூன்றென்பர். "காமம் வெகுளி மயக்க மிவைமூன்ற னாமல் கெடக்கெடு
நோய்" என்ற குறளின் கீழ் "அநாதியாய அவிச்சையும், அது பற்றி யானென
மதிக்கும் அகங்காரமும்; அது பற்றி எனக்கிது வேண்டுமென்னு மவாவும்,
அதுபற்றி அப்பொருட்கட் செல்லுமாசையும், அது பற்றி அதன் மறுதலைக்கட்
செல்லுங் கோபமும் என வடநூலார் குற்றமைந்தென்பர். இவர் அவற்றுள்
அகங்காரம் அவிச்சையின் கண்ணும், அவாவுதல் ஆசைக்கண்ணும்
அடங்குதலால் மூன்றென்றார்" என்பன முதலாக உரைத்தவை காண்க.
இவற்றைக் காமம், குரோதம், லோபம, மோகம், மதம் மாச்சரியம் என
ஆறாகவும் வகுப்பர். "கலையமைத்த காமச்செற்றக் குரோதலோப மதவருடை,
உலையமைத்திங் கொன்றமாட்டே னோணகாந்தன் றளியுளீரே" (8) என்ற
ஆளுடைய நம்பிகள் தேவாரமும் பிறவும் காண்க. இவையெல்லா மடங்க
"ஆர்வமுதற் குற்ற" மென்றார். இவை மூலமலத்தின் காரியம்.
நெல்லிற்குமிதவிடும் நீள்செம்பினிற் களிம்பும்போல.
அலைப்பட்ட
- இக்குற்றம் உயிரைப்பற்றி நின்ற முன்னை
நிலையினின்றும் மெய்யுணர்வு இவற்றை அலைக்க, அதிலேபட்டுப் பெயர்ந்த
என்க. மெய்யுணர் வொன்றே நிலைப்படுவதென்றும், ஏனைய குற்றங்கள் ஒரு
காலத்து அலைப்பட்டொழிவன என்றும் குறித்ததும் காண்க.
இங்கு
உவமான உவமேயங்களில் நிலைப்பட்ட மெய்யுணர்வுடையார்
ஏனாதி நாதரும், ஆர்வமுதற் குற்றமுடையார் அதிசூரனும் அவன் படை
வீரருமாயின பொருத்தமும் அழகும் கண்டு களிக்க.
கொல்களத்தினும்
நிலைப்பட்ட மெய்யுணர்வு மயமாக விளங்கினார்
நாயனார் என்பது, பின்னர்த் திருநீற்றின் பொலிவினை மாற்றானெற்றியிற்
கண்டபோதே அவனது கொள்கைக்கு குறிவழிநின்ற நேர்மையாலும்,
அதன்மேலும் நிராயுதரைக்
|