பக்கம் எண் :


ஏனாதிநாயனார்புராணம்811

 

கையிலிருப்பவும் சரிதநிகழ்ச்சி முன்னைநாளிற் போலன்றி வேறு வகையாயின தென்றற்குத் தோற்றுவாய் செய்தபடி.

     தாமே கொண்டு - இவற்றையும் பிறர்கொணர்ந்தால் அவர்
அறிவாராதலின் எவரும் அறியா வகை தாமே எடுத்துத் தாங்கினார் என்ற
உறுதிபெறத் தாம் என்றொழியாது தாமே என்று ஏகாரமுந் தந்தோதினார்.
இவ்வாறு கூறியது தாம் அழகிதென அமைந்து ஒப்புக் கொண்ட அதனை
அவ்வாறே நிறைவேற்றுதலில் நாயனார் கையாண்ட மனமார்ந்த உண்மைத்
திறத்தின் ஏற்றமும், தான் சொல்லிய அதனுள் மறைந்து நின்ற மாற்றானது
வஞ்சனையின் ஈனமிகுதியும் காட்டுதற் பொருட்டாம்.

     தாமே புறம் போந்து என்றும் கூட்டுக.

     மற்றவன்- தாம் கொண்டவாறு உண்மைத் திறத்தினில்லாத
வஞ்சமுடையவன். முன் சொல்லிக் குறித்த- வேறு கருத்தினை எண்ணிக்
குறித்துச் சொல்லிய என்க. இவர் சென்றதும் அவன் குறித்ததும்
அக்களமேயாயினும் இவர் குறித்துச் சென்ற காரணம் வேறு; அவன் குறித்துச்
சொன்ன காரணம் வேறு என்பது.

     பற்றலன் - பகைவன். இனி அவன் பற்றுதலின்றி வஞ்சனையாற்
றிருநீறு பூண்பான் என்பது குறிப்பு. முன் - அவன் அக்களம் சேரு முன்பு.

     தனி நின்றார் - தனி - அவன் சொல்லியதில் தாம் அமைந்த
உண்மை நிலையை முற்றக் காப்பவராய்த் தாமே தனித்து. தனி - ஒப்பற்ற
நிலையிலே என்றலுமாம்.

     நின்றார் - நிற்பாராயினார். 33

641.
தீங்கு குறித்தழைத்த தீயோன் றிருநீறு
தாங்கிய நெற்றியினார் தங்களையே யெவ்விடத்து
மாங்கவருந் தீங்கிழையா ரென்ப தறிந்தானாய்ப்
பாங்கிற் றிருநீறு பண்டு பயிலாதான்
              34
   
 642.

வெண்ணீறு நெற்றி விரவப் புறம்பூசி
யுண்ணெஞ்சில் வஞ்சக் கறுப்பு முடன்கொண்டு
வண்ணச் சுடர்வாள் மணிப்பலகை கைக்கொண்டு
புண்ணியப்போர் வீரர்க்குச் சொன்ன விடம்புகுந்தான்.
35

     641. (இ-ள்.) வெளிப்படை. வஞ்சனையினால் தீங்கு இயற்ற உட்குறி
வைத்துப் போருக்கு அழைத்த கொடியோன் திருநீற்றினைப் பூசிய
நெற்றியினை யுடையார்க்கு எவ்விடத்தும் எஞ்ஞான்றும் அந்நாயனார் தீங்கு
செய்யமாட்டார் என்பதறிந்தவனாதலின் உண்மைப் பாங்கிலே முன்னம்
திருநீற்றினை அணிந்து பயிலாதவனாகியும், 34

     642. (இ-ள்.) வெளிப்படை. திருவெண்ணீற்றினை நெற்றி முழுதும்
பொருந்தும்படி புறத்திற் பூசி, நெஞ்சினுள்ளே வஞ்சனையாகிய கறுப்பினையும்
உடனே கொண்டு அழகிய சுடருடைய வாளினையும் மணிகளிழைத்த
பலகையினையும் கைகளிற் கொண்டு, புண்ணியப்போர் வீரராகிய
ஏனாதிநாதருக்குத் தான் சொல்லிவிட்ட அந்த இடத்திற் புகுந்தான். 35

     641. (வி-ரை.) தீங்கு - பலவகையாலும் பெரிதும் வஞ்சித்து வெல்வது.
குறித்து - எண்ணி - கருதி. அழைத்த தீயோன் - முன்னரும் அழைத்தான்
என்றார். 616 - 617 - 618 காண்க. ஆயின் அங்கு நேர்முகமாய்ப் போருக்கு
அறைகூவி அழைத்தது போலன்றி இங்கு மறைமுகமாய்ப் போர் செய்யாமலே
வெற்றி பெறவேண்டித் தீமை கருதி யழைத்தான் என்பார் அழைத்த
தீயோன்
என்றார். முன் தீயோன் (638) என்று கூறியபடியே இங்கும்
குறித்ததை உன்னுக.

     திருநீறு.....தீங்கிழையார்- இஃது ஏனாதிநாதர் கொண்டொழுகிய
ஒழுக்கம். "தொன்மைத் திருநீற்றுத் தொண்டின் வழிபாட்டின், நன்மைக்க
ணின்ற