இச்சரிதத்தில் இறைவர்தமது
நின்மலமாகிய சத்தித்திருமேனியிற்கண் அதிற்
குருதிபோலவும் காட்டினர். இவ்வாறு இல்லாதவற்றை உள்ளனபோலும்
காட்டியவரை வாய்மைக் காவலர் என்ற தென்னை?
எனின், அவை
நாயனாரின் உண்மையைக் காட்ட எழுந்தன ஆகலின் வாய்மைக்காவலின்
நிகழ்ந்தன என்க. இதுவும் இச்சரிதக் குறிப்பாதல் காண்க.
இவ்வாறன்றி
வேதம் உபசார மாத்திரையாய் எல்லாத் தேவரையும்
சொல்லுமாயினும் உண்மையிற் சிவனையே முதல்வனாக உள்ளத்தில்
(இதயத்தில்) வைத்துக் கூறும் ஆதலின் அவ்வாறு வேத உண்மையாய் நின்ற
காவலர் என்றதுமாம்.
திருக்காளத்தி
- சிலந்தியும்,
காளனும் (பாம்பு), அத்தி (யானை)யும்
பூசித்துப் பேறு பெற்றமையால் இப்பேர் பெற்றது. "இந்தமலை காளனோ
டத்தி தம்மி லிகலிவழி பாடு செய விறைவர் மேவு, மந்தமில்சீர்க் காளத்தி
மலையாம்" (திருஞான - புராண - 1020) முதலியவைகாண்க. தலவிசேடம்
பார்க்க.
திருக்காளத்திக்
கண்ணப்பர் -
காளத்தியிலே வழிபட்டுக்
கண்ணப்பிப் பேறு பெற்றவர் என்றது சரிதக் குறிப்பு. காளத்தியும்
கண்ணப்பரும் பிரிக்கக்கூடாதபடி யிணைந்துள்ள நிலையும் குறிப்பதாம்.
கண்ணப்பர் என்ற பேர் காளத்தியிற் போந்தது என்பதும் குறித்தார்.
கண்ணப்பர்
திருநாடு - திருநாடு - அவதரித்த நாடு. கண்ணப்பர்
- இவருக்குத் தாய் தந்தையர் இட்ட திண்ணன் என்றதனினும் இப்பெயரே
சிறந்தது. இஃது இறைவன் தந்தது. ஆசாரியர்கள் யாவரும்
இப்பெயர்கொண்டே துதித்தனர். இஃது அவர் சரிதங் குறிப்பதுமாம்; ஆதலின்
இப்பெயரால் தோற்றுவாய் செய்தனர்.
நாவலர்
புகழ்ந்து போற்று நல்வளம் -
குறிஞ்சிநில வளத்தைத்
தமிழ் இலக்கணம் முறை செய்யும் வகையினைப் புகழ்ந்து என்றும்,
இந்நாட்டுக் குறிஞ்சி, தலையன்புக் கிலக்கியமாய் நிற்கும் நாயனார்
அவதரிக்கும் பேறு பெற்ற நாடாயினமையின் போற்றும் என்றும்
கூறினார்.
இது பற்றியே வளம் என்னாது நல்வளம் என்றதுமாம். அச்சிறப்பு மிகுதியும்
பெற்றதனோடு எஞ்ஞான்றும் நிலைபெறவும் பெற்ற தென்பார் பெருகிநின்ற
என்றார். நாவலர் - கலைவாணி
யருள்பெற்ற கலை நாவலரும், ஞான வாணி
தந்நாவிற் பதியப் பெற்ற ஞான நாவலரும் என நாவலராவார் இருவகையினர்.
இங்குக் கூறிய நாவலர் பிற்கூறிய நிலையினராகிய நக்கீரதேவர், சமய குரவர்
முதலிய ஞானத்தமிழ் நாவலர். பதினொராந் திருமுறை முதலாயின
அருட்பாட்டுக்கள் காண்க.
பூ
அலர் வாவி சோலை - வாவியிற் பூப்பன தாமரை முதலிய
நீர்ப்பூக்கள். நால்வகைப் பூக்களில் ஏனை மூன்றும் சோலையிற் பூப்பன.
இவை யெல்லாம் இந்நாட்டிற்காண உளவாம் என்பார் வாவி
சோலை என்று
சேர்த்துக்கூறினார். வாவிசோலை - உம்மைத் தொகை. இவை ஏனை நாட்டிற்
போலச் செயற்கையானன்றி இங்கு இயல்பிற் பொருந்துவன என்ற குறிப்புப்
பெறச் சூழ்ந்த என்றார்.
பொத்தப்பி
நாடு - காளத்திமலைச் சாரலுக்கு வடக்கே 40 - 50
நாழிகையளவில் உள்ளது. குறிஞ்சிப் பகுதியைச் சேர்ந்த மலைநாடு. இப்பெயர்
இன்றும் வழக்கிலிருக்கின்றது. பொத்தப்பி நாட்டைக் கண்ணப்பர்
திருநாடென்ப எனக்கூட்டுக.
போற்ற
- பெருக - போத்தப்பி - என்பனவும் பாடங்கள். 1
651.
|
இத்திரு
நாடு தன்னி லிவர்திருப் பதியா தென்னி
னித்தில வருவிச் சார னீள்வரை சூழ்ந்த பாங்கர்
மத்தவெங் களிற்றுக் கோட்டு வன்றொடர் வேலி கோலி
யொத்தபே ரரணஞ் சூழ்ந்த முதுபதி யுடுப்பூ ராகும். 2
|
|