மறைக்காட்டுப் பூந்துறை - அக்கடற்றுறையின் அமைப்பும், முத்துக்குளித்தல், உப்பளம் சார்தல் முதலிய அருமைப்பாடுடைய செல்வங்கள் பலவும் பெறும் வகைகளும் குறிக்கப் பூந்துறை என்றார்; 1529 பார்க்க. |
நள்ளென்று - மேற்பாட்டில் நள்ளென்ற கங்குல் என்பது காண்க. 26 |
| கட்டளைக் கலித்துறை |
| | புள்ளுந் துயின்று பொழிதிறு மாந்து கழுதுறங்கி நள்ளென்ற சங்கு லிருள்வாய்ப் பெருகிய வார்பனிநாட் டுள்ளுங் கலைக்கைச் சுடர்வண் ணனைத்தொழு வார்மனம்போன் றுள்ளு முருக வொருவர்திண் டேர்வந் துலாத்தருமே. 27 | |
(இ-ள்) புள்ளும்....நாள் - இரவில் இயங்கும் புட்களும் துயில்பெற்று, யாமப்பொழுது முற்றிப், பேயும் உறங்கி, மிக்க நள்ளென்ற இரவின் இருள்பெருகிய நெடிய பனிநாளிலே; துள்ளும்....போன்று - துள்ளும் மான் கலையை ஏந்திய கையினையுடைய சுடர்வண்ணராகிய இறைவரைத் தொழுகின்றவர்களுடைய மனம்போல்; உள்ளும் உருக - மனமும் உருகும்படி; ஒருவர்....தருமே - ஒப்பற்ற தலைவருடைய தேர் கங்குலிருள்வாய் வந்து உலாவும். |
(வி-ரை) திணை - கைக்கிளை; துறை - இரவுக்குறி நேர்ந்த தோழி கூற்று. |
புள்ளும்....பனி நாள்: புள் துயிலுதல் - பொழுது இறுமாத்தல் - கழுது உறங்குதல் - முதலியவை நள்ளிருளிரவின் நிகழ்ச்சிகளாகிய அடையாளங்கள். புள் - இரவில் இயங்கும் புட்கள். புள்ளும் - உம்மை உயர்வு சிறப்பு. பொழுது இறுமாத்தல் - பொழுது முற்றி நடுஇரவாதல்; இறுமாத்தல் - இதன்மேல் முற்றும் நிலையில்லை என்னும்படி நள்ளிரவாதல். இறுமாப்பு - தற்குறிப்பேற்றம்; கழுது - பேய்; “பேயு முறங்கும் பிறங்கிருள்வாய்” (ஏயர்கோ - புராணம் - 322). துள்ளுங்கலை - துள்ளுதல் மானினத்தின் இயல்பு குறித்தது. தொழுவார் மனம் போன்று - உள்ளும் உருக - மனம்போல் - மனம் உருகுதல்போல; வினைபற்றிவந்த உவமம். உவமேயத்தில், நள்ளிரவிருளில் தன்பொருட்டு அன்புசெய்துவந்த தலைவனது அன்புக்கு உள்ள முருகுதல் பொதுத்தன்மை; ஒருவர் - ஒப்பற்ற தலைவர். உலாத்தருதல் - இரவுக் குறி. 27 |
| நேரிசை யாசிரியப்பா |
| | உலாநீர்க் கங்கை யொருசடைக் கரந்து புலானீ ரொழுகப் பொருகளி றுரித்த பூத நாத னாதி மூர்த்தி திருமட மலைமகட் கொருகூறு கொடுத்துத்தன் | |
| 5 | அன்பி னணைத்தவ னாரூர் நண்பகல் வலம்புரி யடுப்பா மாமுத் தரிசி சலஞ்சல நிறைய வேற்றி நலந்திகழ் பவளச் செந்தீ மூட்டிப் பொலம்பட விப்பியந் துடுப்பா லொப்பத் துழாவி | |
| 10 | | யடாஅ தட்ட வமுதம் வாய்மடுத் | |