னும் கூறினார். அவர்கள் திருத்தொண்டத் தொகையினுள் போற்றப்படுதற் கேதுவும் உடன்கூறியவாறு,. |
பொற்பமைந்த சடையார் - அரவாரும் சடையார் - புரிசடையார் எனத் தனித்தனி கூட்டுக. |
தமையல்லால் - வாய் திறவா - தம்மையே சொல்கின்ற; எதிர்மறையாற் கூறியது உறுதி பயத்தற் பொருட்டு; சொற்பதங்கள் - சொற்பொருள்கள்; வாய் திறத்தல் - பாடுதல், பேசுதல், |
தமையல்லால் வாய்திறவாத் தொண்டுநெறி - சடையாரைப் பாடும் தொண்டு; பாடுதல் வாயிலாகச் செய்யும் தொண்டின் நெறி; பாடுதல் பற்றியன்றி அதனால் வரும் அடிமைத் திறமே இங்குக் கருதப்படுமென்பார். தொண்டுநெறி தலைநின்ற என்று அதனை வற்புறுத்தினார். |
தலை நிற்றல் - ஒருசொல்; சிறத்தல், பெற்றி - நற்பண்பு; நன்மை. |
மெய்யடிமை யுடையாராம் - பொய்யடிமை யில்லாதாராய் நிற்றலேயன்றி மெய்யடிமையுடையாராயும் நின்ற என்க. |
யார் வல்லார்கள் - ஒருவருமிலர் என்று, வினா எதிர்மறை குறித்தது; மற்று - முன்கூறியபடி எதிர்மறை உடன்பாடு என்ற இருவகையா லறிந்துரைப்பதன்றி வேறு வகையால் என்ற பொருள் தந்து நின்றது. |
குறிப்பு: பொய்யடிமை இல்லாத புலவர் யார்? என்ற இது பற்றிய ஆராய்ச்சி இந்நாளில் பலரை அலைத்து வருகின்றது. முதனூலாகிய திருத்தொண்டத் தொகையிலும், சார்புநூலாகிய புராணத்திலும் அவர்கள் இயற்பெயர் கூறப்படவில்லை. வழிநூலாகிய திருத்தொண்டர் திருவந்தாதியில் அவர்கள் நாற்பத்தொன்பது பல்புலவோர் என்றும், கபிலர், பரணர், நக்கீரர் முதலாக வரும் சங்கப்புலவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது; இதுகொண்டு இந்நாள் ஆராய்ச்சி யுலகம், தத்தமக்கேற்றபடி, பலவாறும் ஆய்ந்து அலைகின்றதும், அலைக்கின்றதுமாயிற்று; இப்புலவர் ஒரு கூட்டத்தவரோ அன்றி ஒருவரோ என்று ஐயப்படுவாரும், ஒருவர்தான் என்று துணிவாரும், அவர் மாணிக்கவாசகர் என்று முடிப்பாரு மாயினார்கள் சில ஆராய்ச்சியாளர். இவ்வாராய்ச்சிக் கூற்றுக்களின் பிறழ்வுகளையும் குற்றங்களையும், அபசாரங்களையும் பற்றிச் சில கருத்துக்கள் இங்குக் காட்டவேண்டிய தவசியமாகின்றது. |
நூல் என்பது “நூல் போறலின் நூலென்ப” (போறல் - போலிருத்தல்) பாவைபோல்வாளைப் பாவை என்றதுபோல; நூல்போறலென்பது - நுண்ணிய பலவாய பஞ்சின் நுனிகளாற் கைவன்மகடூஉத் தனது செயற் கை நலந் தோன்ற ஓரிழைப் படுத்தலாம் உலகத்து நூனூற்ற லென்பது; அவ்வாறே சுகிர்ந்து பரந்த சொற்பாவைகளாற் பெரும்புலவன் தனது உணர்வு மாட்சியிற் பிண்டம் படலம் ஓத்துச் சூத்திரமென்னும் யாப்புநடை படக் கோத்தலாயிற்று. நூல் செய்தலாவது அவ்வாறு நூற்கப்படுதலின் நூலெனப்பட்டது; இனி, ஒரு சாரார் நூல்போலச் செப்பஞ் செய்தலின் நூலென்ப; இனித் தந்திரம் என்று வடமொழிப்பொருளை நூலென வழங்குதல் தமிழ் வழக்கெனக் கொள்க” என்பது இறையனா ரகப்பொருளுரை; “பஞ்சுதன் சொல்லாப் பனுவ லிழையாகச் , செஞ்சொற் புலவனே சேயிழையா - வெஞ்சாத, கையேவா யாகக் கதிரே மதியாக, மையிலா நூன்முடியுமாறு”. |
இனி, இந்நூல் முதல் வழி சார்பு என மூன்று வகைப்படும்; “முதல்வழி சால்பென நூன்மூன் றாகும்”; அவற்றுள் முதனூலாவது வரம்பி லறிவன் பயந்த |