பக்கம் எண் :

பெரியபுராணம்229

தாகும்.என்னை? “வினையி னீங்கி விளங்கிய வறிவின், முனைவன் கண்டது
முதனூலாகும்” எனவும், ழுமுதல்வ னூற்குப் பிறன்கோட் கூறாது ” எனவும், “தந்திரஞ்
சூத்திரம் விருத்தி மூன்றிற்கு, முந்துநூ லில்லாது முதனூ லாகும்” எனவுஞ்
சொன்னாராகலின்; இனி அந்நூலொடு ஒத்த மரபிற்றாகி ஆசிரியமத விகற்பம் படக்
கிடப்பது வழிநூலெனப்படும்; “என்னை?” முன்னோர் நூலின் முடிபொருங்
கொத்துப்
, பின்னோன் வேண்டுங் விகற்பங் கூறி, யழியா மரபினது வழிநூ
லாகும்” என்றாராகலின்; இவ்விருவர் நூலுள்ளும் ஒரு வழி முடிந்த பொருளை
ஓருபகார நோக்கி ஒரு கோவைப் படவைப்பது
சார்பு நூலாகும். என்னை? “இருவர்
நூற்கு மொருசிறை தொடங்கித், திரிபுவே றுடையது புடைநூலாகும்” என்றாராகலின்;
புடைநூல் - சார்புநூல்; ஒரு கிழங்கினின் ஒருபுறம் புடைத்து வெளிப்பட்டுவரும் அதன்
கன்று போல” என்பது (இறையனாரகப் பொருளுரை).
 
     இவ்வகையாலே திருத்தொண்டத் தொகையும், திருத்தொண்டர் திருவந்தாதியும்,
திருத்தொண்டர் புராணமும் முறையே முதல் - வழி - சார்பு நூல்கள் என
வழங்கப்படும். இவ்வழக்கு “மற்றி தற்குப் பதிகம்வன்றொண்டர்தாம், புற்றி டத்தெம்
புராண னருளினாற், சொற்ற மெய்த்திருத் தொண்டத் தொகை யெனப், பெற்ற நற்பதி
கந்தொழப் பெற்றதால் (48) “அந்த மெய்ப்பதி கத்தடி யார்களை, நந்தநாதனா
நம்பியாண்டார் நம்பி
, புந்தி யாரப் புகன்ற வகையினால், வந்த வாறு வழாம
லியம் புவாம்” (49) என்று ஆசிரியர் உரைத்தவாற்றால் வழங்கப்படுவதாயிற்று.
இங்குப் “பொய்யடிமை யில்லாத புலவர்” என்று தொகைநூலுட் குறித்த
அடியார்களாவார், வழிநூலுட் காட்டியபடி சங்கத்தாருட் சிவனையே பாடிய
பல்புலவோரா? அன்றி வேறா? என்பது வினா. வேறென்று கொண்டு, ஆராய்வோர்
சார்புநூலுள் ஆசிரியர் தமிழ்ச்சங்கத்தையேனும், புலவர் பெயரையேனும் கூறாமையால்
வழிநூலார் கூற்று ஆசிரியர்க்கு உடம்பாடில்லை என்பர்.
 
     முதல் - வழி - சார்பு என்ற பாகுபாடு இம்மூன்று நூல்களுக்கும் வழங்குதல்
ஒருசார்பு ஒப்புமை பற்றியேயாம்; உலகியல் வழக்கினுள் வைத்து ஒருமுறையால்
உணர்ந்துகொள்ளுதற் பொருட்டே இங்ஙனம் வழங்குவதென்பது. என்னை?
இம்மூன்றாசிரியர்களும் பதிபுண்ணியப் பெருவாழ்வுடையராய், மல நீங்கிய சீவன்
முத்தராய், வினையினீங்கி விளங்கிய அறிவின் முனைவனார் இவர்களது
திருவாக்கினைத் தமது திருவாக்குக்கு ஒப்ப விளங்குதல்பெறு மிடமாகக்கொண்டு
வீற்றிருக்கும் பண்பு வாய்ந்தவர்களாய் நிற்கும் திறம்பற்றி என்க. நம்பியாரூரருக்குத்
“திருவாரூர்ப் பெருமான் மன்னுசீர் அடியார் தங்கள் வழித்தொண்டை யுணர
நல்கி.....அவர்கள் பெருமையை அருளிச்செய்து - அவர்களைப் பாடுக” என்றருளித்
“தில்லைவாழந்தணர் தம்மடியார்க்கு மடியேன்” என்று அடியுமெடுத்துக் கொடுத்தருள.
அவ்வருளுருவாய் நின்று நம்பிகள் பாடியருளியது முதனூலாகிய திருத்தொண்டத்
தொகையாம்; இனி, “என்னை நினைந்தடிமை கொண்டென் னிடர்கெடுத்துத் தன்னை
நினையத் தருகின்றான்” என்றபடி திருநாரையூர்ப் பொல்லாப்பிள்ளையாரும்,
“வழிமொழி தந்தெனை வாழ்வித்தவன்” (திருவந் - 68) என்றபடி ஆளுடைய
பிள்ளையாரும் அருளப்பெற்று அறுபத்து மூவர்களது பதி - தே - மரபு - செயல் -
பன்ன, அவ்விநாயகர்பா லருள் பெற்று முதனூலின் வழியினையே பற்றி நம்பியாண்டார்
நம்பிகளா லருளப்பெற்ற நூலாதலின் திருத்தொண்டர் திருவந்தாதி வழிநூல் எனப்படும்;
இனி, "வெருளின் மெய்ம்மொழி வானிழல் கூறிய பொருள்" (9) என்றபடி தில்லையில்
நடராசப் பெருமான் "உலகெலாம்" என்று அடியெடுத்துக் கொடுத்தருளப் பெற்று முன்
கூறிய முதனூல் வழிநூல்களின் வழியே சேக்கிழார் பெருமானால் பாடியருளப்