| “அளந்ததிறை முறைகொணரா வரசனுள னொருவ” னென, வுளங்கொள்ளும் வகையுரைப்ப வுறுவியப்பான் முறுவலிப்பார், 16 |
3958. | “ஆங்கவன்யா?” ரென்றருள, “வதிகனவ னணித்தாக வோங்கெயில்சூழ் மலையரணத் துள்ளுறைவா” னெனவுரைப்ப, “வீங்குநுமக் கெதிர்நிற்கு மரணுளதோ? படையெழுந்தப் பாங்கரணந் துகளாகப் பற்றறுப்பீ” ரெனப்பகர்ந்தார். 17 |
3957. (இ-ள்) விளங்குதிரு...முடியார்க்கு - விளங்குகின்ற திருவுடைய வெண்கொற்றக் குடைக்கீழே வீற்றிருந்து உலகத்தை அரசளிக்கும் ஒளிமிக்க நீண்ட முடியினையுடைய அவ்வரசருக்கு; தொன்முறைமை....உரைப்ப - பழைய முறைப்படி நீதி நெறி விளக்கும் அமைச்சர்கள், தேவரீரது கட்டளையின்படி அளவுபடுத்திய திறைப்பொருளை முறைப்படி கொண்டு வந்து செலுத்தாத அரசன் ஒருவன் உளன் என்று அவர் தெரியும்படி உரைக்க; உறுவியப்பால் முறுவலிப்பார் -மிக்க வியப்புடனே புன்முறுவல்செய்வாராகி, 16 |
3958. (இ-ள்) ஆங்கவன் யார் என்றருள - அத்தகைய அவ்வரசன் யாவன்? என்று வினவியருள; அதிகன்.....எனவுரைப்ப - அவன் அதிகன் என்பவன்; ஓங்கும் மதில் சூழ்ந்த மலை அரணத்தின் உள்ளே தங்குவான் என்று மந்திரிகள் சொல்ல; ஈங்கு....எனப்பகர்ந்தார் - இவ்விடத்தில் உங்களுக்கு எதிராக நிலைத்துநிற்கும் அரணும் உளதோ? படையெடுத்து எழுந்து அந்தப் பாங்கு உடைய அரணத்தைத் துகளாகச் செய்து அவனது காவலை அழிப்பீராக என்று கட்டளையிட்டருளினர். 17 |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
3957. (வி-ரை) மதிக்குடை - உவமைத் தொகை; மதி - நிறைமதி; மது - அமிர்தம்; அதனையுடையது மதி. துளங்குஒளி - மிக்கஒளி. துலங்குதல் -விளங்குதல். |
முடியார்க்கு - தெரிந்துரைப்பீர் என்று மொழிந்தருளிய (3955) அவ்வரசர்க்கு விடையாக. |
தொன் முறைமை நெறி - பழமையாக வழிவந்த முறையின் நீதி செலுத்தும் வழியினை அறிவிக்கும். |
அளந்த - அரசர் கட்டளைப்படி அளவு படுத்திக் கட்டளையிட்ட; முறை முறைப்படி. |
ஒருவன் - ஒருவனே; பிறரில்லை என்க. ஏகாரம் தொக்கது. |
முறுவலிப்பார் - சினமும் இகழ்ச்சியும் பற்றிய புன்முறுவல் பூத்து. முற்றெச்சம். முறுவல் - புன்னகை. 16 |
3958. (வி-ரை) ஆங்கு - அத்தன்மையுள்ள. |
அவன் - அதிகன் என்க. அதிகன் என்பது அவன் பெயர்; அவன் பெயர் அதிகன், அதியமான் நெடுமானஞ்சி, என்று புறநானூறு முதலிய பழந்தமிழ் நூற்களில் வழங்கும். கொங்குநாட்டின் கீழ் பாகங்களை ஆண்டனர் இக்குறுநில மன்னர் மரபினர். இவர்களுக்குத் தகடூர் தலைநகராயிருந்தது. தகடூர் சேலம் சில்லாவில் தர்மபுரி என வழங்கும் நகரம். கொல்லிமலை (சேலம் சில்லாவின் தென்பாகம்), குதிரை மலை (கோயமுத்தூர் சில்லாவின் உடுமலைப்பேட்டைத் தாலுகாவில் உள்ளது) என்பன இவனது மலையரணங்கள் - இவன் பெருமுடி மன்னர்களுக்கும் அடங்காதவனாய்ச் சேர சோழ பாண்டியருள்ளிட்ட எழுவரோடும் பகைத்து அவர்களுடன் போர் |