பக்கம் எண் :

பொய்யடிமை இல்லாத புலவர் சருக்கம்310

சிறப்பினையுடைய தமது மனைவியாரை விற்றுப் பொருள் பெற்றும் பணி செய்வதற்கு
வழி தேடுவாராய்,                                                   12
 

     4034. (இ-ள்) மனமகிழ்ந்து...தளர்வெய்தி - மனமகிழ்ச்சியுடனே
மனைவியாரைக்கொண்டு வளமுடைய அந்நகரின் கண்ணே பொருள் கொடுப்பார்களை
எங்கும் கிடைக்காமையினாலே தளர்ச்சியுற்று; சினவிடையார்....அறியாதார் - சினமுடைய
இடபத்தினையுடைய இறைவரது திருக்கோயிலில் திருவிளக்குப்பணி முட்டுதலை இதன்
முன்பு கனவிலும் அறியாதவராகிய அந்நாயனார்; கையறவால் எய்தினார் - வேறு
செயலற்ற தன்மையினாலே திருக்கோயிலின்கண் வந்து சேர்ந்தனர்.       13
 

     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 
     4033. (வி-ரை) அப்பணியால்......கிடையாத - வகைமுட்ட - இது உலகியற்
பொருணூலின் உண்மைகளுள் ஒன்று; ஒரு தொழிலால் வரும் ஊதியம்
அத்தொழிலையே செய்வோர் பலராயினபோது பங்கிடப்பட்டு அவ்வவர் பெறும்
பொருள் சிறிதாகும் என்பது; Fall of income due to competition என்பர் நவீனர்.
 
     இடருழந்தே - துன்பத்தால் வருந்தி; பணிமுட்டுதலினால் வரும் துன்பம்; முன்
“தளரும் மனம்( 4031) என்றதும், மேல் தளர்வெய்தி (4034) என்பதும் காண்க.
 
     ஒப்பின்மனை.....மாண்டதற்பின் - மனை - வீடு - இல்லம்; தொழில்
செய்வினையாற் கூலி கிடையாதபோது தமது மனையினை விற்று விளக்கிட்டார்;
அப்பொருளும் மாண்டது; அதன்பின் .- என்ற இத்துணையும் கருத மனை
விற்றெரிக்கும் உறுபொருள் என்று சுருக்கிக் கூறியது கவிநயம். அன்பர்கள் வருந்தும்
நிலைகளை விரித்துக்கூறாமலே சுட்டிக் காட்டிச் செல்லும் ஆசிரியரது மரபுமாம்.
ஒப்பின் மனை - நாயனாரது திருமனையாதலாலும், சிவன் திருவிளக்குப் பணிக்குச்
சாதனமாக உதவியதாலும் ஒப்பில்லாததாயிற்று; இவ்வாறே முன் “அந்தமின் மனை”
(458) என்றதும் காண்க. உறுபொருள் என்ற கருத்துமிது.
 
     மனையாரை விற்பதற்குத் தேடுவார் - அடிமைகளையும் மனைவியரையும்
தம்மையும் விலைப்பண்டங்களாகக் கொண்ட கடன் வாங்குதலும் விலைப்படுத்துதலும்
முன்னாளில் வழக்கிலிருந்த. “தன்னை மாறி யிறுக்க வுள்ள கடன்க டக்கன கொண்டு”
(446); “நாடிய வடிமை விற்றும்” (838); ஆள் அடைமானப் பத்திரம் என்பன
இந்நாளிலும் வழக்கிலுள்ளன. அரிச்சந்திரன் கதை முதலியனவும் காண்க.
 
     தேடுவார் - வகையினைத் தேடுவாராகி; முற்றெச்சம். தேடுவார் - கிடையாமல்
எய்தினார் என மேல்வரும் பாட்டுடன் முடிக்க.                   12
 
     4034. (வி-ரை) மனமகிழ்ந்து சென்று விலைப்படுத்த முயல என்க.
 
    கொண்டு - தனமளிப்பார் - என்று கூட்டுக; கொள்ளுதல் - விலைப்பண்டமாக
ஏற்றுக்கொள்ளுதல்; தனம் - விலைப் பொருள்.
 
     வளநகரில் - தனமளிப்பாரைக் கிடையாமை திருவருளால் நேர்ந்ததன்றி,
நகரிலுள்ளாரது வளமின்மையா லானதன்று என்பது குறிப்பு.
 
     திருவிளக்குப் பணிமுட்டக் கனவினுமுன் பறியாதார் - முட்ட -
முட்டும்நிலையினை; முன்பு கனவிலும் அறியாமையாவது இதன்முன் தம் வாழ்நாளுள்
எந்நாளினும் நனவில் கண்டு அறியாமையே யன்றிக் கனவிற்றானும் அறியாதநிலை;
உம்மை