இறந்தது தழுவியது. கனவினும் - தம் விழிப்புநிலை வசமிழந்த அந்நிலையினும் என்று சிறப்பும்மையுமாம். |
கையறவு - வேறு செயலற்ற நிலை; தமது பொருட் சார்வு - உடல் முயற்சிச் சார்வு - உயிர்ச் சார்வு முதலிய எல்லாம் தீர்ந்து கழிந்தனவாதலின் கையற்ற நிலையில்; கை - துணை. |
எய்தினார் - திருக்கோயிலில் சேர்ந்தனர். திருக்கோயிலில் என்பது குறிப்பெச்சம். |
மனமகிழ்ந்து - இஃது உலகியலின் மேம்பட்ட அன்புநெறி வழக்கு; உலகியல் நிலையில் வைத்துக் காணத் தக்கதன்று; இயற்பகை நாயனார் வரலாற்றின் நுட்பமும் இங்கு வைத்துக் காணத்தக்கது. 13 |
4035. | பணிகொள்ளும் படம்பக்க நாயகர்தங் கோயிலினுள் அணிகொள்ளுந் திருவிளக்குப் பணிமாறு மமையத்தின் “மணிவண்ணச் சுடர்விளக்கு மாளிலியான் மாள்வ” னெனத் துணிவுள்ளங் கொளநினைந்தவ் வினைமுடிக்கத் தொடங்குவார், 14 |
4036. | திருவிளக்குத் திரியிட்டங் ககல்பரப்பிச் செயனிரம்ப வொருவியவெண் ணெய்க்கீடா வுடலுதிரங் கொடுநிறைக்கக் கருவியினான் மிடறரிய வக்கையைக் கண்ணுதலார் பெருகுதிருக் கருணையுட னேர்வந்து பிடித்தருளி, 15 |
4037. | மற்றவர்தம் முன்னாக மழவிடைமே லெழுந்தருள வுற்றவூ றதுநீங்கி யொளிவிளங்க வுச்சியின்மேற் பற்றியவஞ் சலியினராய் நின்றவரைப் பரமர்தாம் பொற்புடைய சிவபுரியிற் பொலிந்திருக்க வருள்புரிந்தார். 16 |
4036. (இ-ள்) பணிகொள்ளும்...கோயிலினுள் - தம்மை அடிமைகொண்டு தமது பணியினை ஏற்றருளும் படம்பக்க நாதரது திருக்கோயிலினுள்ளே; அணிகொள்ளும்.....அமையத்தில் - அழகு நிறையும் திருவிளக்குத் திருப்பணி செய்ய நின்ற அந்த நேரத்தில்; மணிவண்ண.....நினைந்து - மணிபோன்ற சுடர்களையுடைய திருவிளக்கு எரிக்கப்படாமல் நின்று படுமாயின் நான் மாள்வதே கருமம் என்ற துணிவினை மனம் கொள்ளும்படி நினைந்து; அவ்வினை முடிக்கத் தொடங்குவார் - அச்செயலினையே முடிக்கத் தொடங்குவாராகி, 14 |
4036. (இ-ள்) திருவிளக்கு.....பரப்பி - திருவிளக்குக்களுக் கெல்லாம் திரியினை இட்டு அங்கு அகல்களை முறையாகப் பரப்பி வைத்து; செயல் நிரம்ப....மிடறரிய - அச்செயல் நிரம்பும்படி கிட்டாது ஒழிந்த எண்ணெய்க்கு ஈடாகத் தமது உடலினிறைந்த உதிரத்தைக் கொண்டு நிறைக்கும்படி கருவிகொண்டு தமது கழுத்தினை அரியவே; அக் கையை - அவ்வாறு அரியும் கையினை; கண்ணுதலார்......பிடித்தருளி - நுதற்கண்ணினையுடைய இறைவர் பெருகும் திருக்கருணையுடனே நேராக வெளிப்பட்டு வந்து அக்காரியம் செய்யவிடாமற் பிடித்தருளி, 15 |
4037. (இ-ள்) மற்றவர்தம்....எழுந்தருள - அவர் முன்பு இளமை பொருந்திய இடபத்தின்மேல் எழுந்தருளி நிற்க; உற்ற...விளங்க - அரிதலினால் பொருந் |