* * * * * * * * 7
1118. ஆதல்செய்தா னரக்கர்தங்கோனை
யருவரையின்
நோதல்செய்தா னொடிவரையின்கண்
விரலூன்றிப்
பேர்தல்செய்தான்
பெண்மகள்தன்னோ
டொருபாகம்
காதல்செய்தான்
காதல்செய்கோயில்
கழுக்குன்றே. 8
1119. இடந்தபெம்மா னேனமதாயு
மனமாயும்
தொடர்ந்தபெம்மான் றூமதிசூடி
வரையார்தம்
__________________________________________________
கு-ரை: விரிசடைமேல் கங்கையையும்
கொன்றையையும் சூட வல்லவனும், அடிபணியும் அடியார் உள்ளங்களில்
எல்லாம் உடனாய்நின்று ஆடும் கள்ளனுமாகிய
பெருமான் காதலிக்கும் கோயில் கழுக்குன்று என்கின்றது.
வெள்ளம் - கங்கை. குரை கழல் - ஒலிக்கும் வீரக்கழல்.
உள்கி - எண்ணி.
7. * * * * * * * * *
8. பொ-ரை: அரக்கர் கோனை அரிய கயிலை
மலையின்கீழ் அகப்படுத்தி, நொடிப்பொழுதில்
கால் விரலை ஊன்றி, அவனை நோதல் செய்தவனும்,
பிறகு அவனுக்கு ஆக்கம் வழங்கியவனும், பெண்மகளாகிய
உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டு காதல் செய்தவனுமாகிய
சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம்
ஆகும்.
கு-ரை: கைலையைத் தூக்கிய இராவணனை அழியச்
செய்தவனும், உமையை ஒருபாகத்திருத்திக்
காதல் செய்தவனும் ஆகிய இறைவன் இடம் இது என்கின்றது.
நொடிவரை - நொடிப்பொழுது.
9. பொ-ரை: அடிமுடி காணப் பன்றி
உருவோடு நிலத்தை அகழ்ந்து சென்ற திருமாலும், அன்னமாய்ப்
பறந்து சென்ற நான்
|