பக்கம் எண் :

1016திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


மடந்தைபெம்மான் வார்கழலோச்சிக்

காலனைக்

கடந்தபெம்மான் காதல்செய்கோயில்

கழுக்குன்றே. 9

1120. தேயநின்றான் றிரிபுரங்கங்கை

சடைமேலே

பாயநின்றான் பலர்புகழ்ந்தேத்த

வுலகெல்லாம்

சாயநின்றான் வன்சமண்குண்டர்

சாக்கீயர்

காயநின்றான் காதல்செய்கோயில்

கழுக்குன்றே. 10

__________________________________________________

முகனும், தொடர்ந்த பெருமானாய், தூய மதியை முடியிற் சூடியவன், மலைமகளின் தலைவன், வார்கழலணிந்த திருவடியை உயர்த்திக் காலனைக் காய்ந்தவன் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றம் ஆகும்.

கு-ரை: திருமால் பன்றியாய்த் தோண்டிக் காணவும், பிரமன் அன்னமாய்ப் பறந்து தொடரவும் நின்ற பெருமான், காலனைக் கடந்த பெருமான் காதல்செய்த இடம் இது என்கின்றது. இடந்த - தோண்டிய ஏனம் - பன்றி. கடந்த - வென்ற.

10. பொ-ரை: முப்புரங்களை அழியுமாறு செய்தவனும், பெருகி வந்த கங்கை தன் சடை மேல் பாய நின்றவனும், பலரும் புகழ்ந்து போற்ற உலகனைத்தும் ஊழி இறுதியில் அழியுமாறு நின்றவனும், வலிய சமண் குண்டர்களும், புத்தர்களும் கெடுமாறு நின்றவனும் ஆகிய சிவபிரான் காதல் செய்யும் கோயில் கழுக்குன்றமாகும்.

கு-ரை: திரிபுரம் தேயவும், கங்கை சடைமேலே பாயவும் நின்ற பெருமான், புறச்சமயிகள் காயநின்றவன் காதல் செய்யுமிடம் கழுக்குன்று என்கின்றது.

தேய - அழிய. சாய - கெட. சாக்கியர் என்பது சந்த நோக்கி நீண்டது.