1132. வேதமோர் கீதமுணர் வாணர்தொழு
தேத்த மிகுவாசப்
போதனைப் போன்மறையோர் பயிலும் புகலிதன்னுள்
நாதனை ஞானமிகு சம்பந்தன் றமிழ்மாலை நாவில்
ஓதவல் லாருலகி லுறுநோய் களைவாரே. 11
திருச்சிற்றம்பலம்.
__________________________________________________
11. பொ-ரை: வேத கீதங்களை உணர்ந்து வாழ்பவர்
தொழுது ஏத்தவும், மிக்க மணமுடைய தாமரை
மலர் மேல் உறையும் நான்முகனைப் போல விளங்கும்
மறையவர் போற்றவும், விளங்கும் புகலியுள் உறையும்
சிவபிரானை ஞானம் மிகும் சம்பந்தன் பாடிய இத்தமிழ்
மாலையை நாவினால் ஓதி வழிபட வல்லவர் மேம்பட்ட
பிறவிப் பிணியை நீக்கிவிடுவர்.
கு-ரை: வேதகீதம் உணர்ந்தவர்களாய்ப்
பிரமனைப் போன்ற பிராமணர்கள் வாழ்கின்ற
புகலியில் இருக்கும் சிவபெருமானைக் குறித்து, ஞானசம்பந்தன்
சொன்ன மாலை ஓதவல்லார் நோய் நீங்குவார்கள்
என்கின்றது. உணர்வாணர் - உணர்தலால் வாழ்பவர்.
வாசப் போதனை - வாசனை பொருந்திய தாமரைப் பூவில்
இருக்கின்ற பிரமனை. உறுநோய் - மிக்க நோய்.
சோணசைலமாலை
இழையெனத்
தளர்சிற் றிடையுணா முலையாள்
எனக்குவண் புகலிவேந்
தயின்ற
கழுமணிப் பசும்பொற் குலவுபாற் கிண்ணம்
கழுவுநீர் வார்ப்பதற் குரையாய்
முழையிடைக் கதிர்மா
மணிவிளக் கேற்றி
முசுக்கலை பிணாவொடும் அசோகத்
தழையிடைத் தழுவி உறங்குறும் சோண
சைலனே கைலைநா
யகனே.
- சிவப்பிரகாச சுவாமிகள். |
|