பக்கம் எண் :

1028திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1137. வீடு பிறப்பெளிதா மதனை

வினவுதிரேல் வெய்ய

காடிட மாகநின்று

கனலேந்திக் கைவீசி

ஆடு மவிர்சடையா னவன்மேய

வாரூரைச் சென்று

பாடுதல் கைதொழுதல்

பணிதல் கருமமே. 5

1138. கங்கையோர் வார்சடைமேற் கரந்தான்

கிளிமழலைக் கேடில்

மங்கையோர் கூறுடையான்

மறையான் மழுவேந்தும்

அங்கையி னானடியே பரவி

யவன்மேய வாரூர்

தங்கையி னாற்றொழுவார்

தடுமாற் றறுப்பாரே. 6

__________________________________________________

5. பொ-ரை: வீடு பேற்றை அடைதல் நமக்கு எளிதாகும். அதற்குரிய வழிகளை நீர் கேட்பீராயின் கூறுகிறேன். கொடிய சுடுகாட்டைத் தனக்குரிய இடமாகக் கொண்டு கனலை ஏந்திக் கைகளை வீசிக்கொண்டு ஆடுகின்ற விளங்கிய சடைமுடியை உடையவனாகிய சிவபிரான் எழுந்தருளிய திருவாரூரை அடைந்து பாடுதல், கைகளால் தொழுதல், பணிதல் ஆகியனவற்றைச் செய்தலே அதற்குரிய வழிகளாகும்.

கு-ரை: முற்கூறியவாறு வினைகளும் நைந்து நல்லன வந்து அடைந்தவிடத்து வீடடைதல் எளிதாம் என்கின்றது இத்திருப்பாடல். வீடு பிறப்பு - வீட்டின்கண் பிறத்தல்; என்றது வீடடைதல் என்னுமளவிற்று. அதனை - உபாயத்தை. வெய்ய காட்டை இடமாகக் கொண்டு, வெய்ய கனலைக் கையேந்தி ஆடுவானாதலின், பாடுவார் தன்மை நோக்காது, கரும நோக்கிக் கருணை செய்வான் என்பதாம்.

6. பொ-ரை: கங்கையை ஒப்பற்ற தனது நீண்ட சடை முடி மேல் கரந்தவனும், கிளி போன்ற மழலை மொழி பேசும் கேடில்லாத உமை மங்கையை ஒரு பாகமாக உடையவனும், மழுவாயுதத்தை அழகிய