1138. கங்கையோர் வார்சடைமேற்
கரந்தான்
கிளிமழலைக் கேடில்
மங்கையோர் கூறுடையான்
மறையான் மழுவேந்தும்
அங்கையி னானடியே பரவி
யவன்மேய வாரூர்
தங்கையி னாற்றொழுவார்
தடுமாற் றறுப்பாரே. 6
__________________________________________________
கையில் ஏந்தியவனும் ஆகிய இறைவன் திருவடிகளையே
பரவி அவன் எழுந்தருளிய திருவாரூரைத் தம் கைகளால்
தொழுபவர் தடுமாற்றங்கள் தவிர்வர்.
கு-ரை: இவ்வண்ணம் கடமைகளை விடாது செய்தவர் வீடு எய்துவார் ஆதலின், பிறவிக்கடலில்
வினைச்சுழலில் தடுமாறார் என இப்பாடல் தெரிவிக்கின்றது.
கிளி மழலை மங்கை - கிளி போன்ற மழலைச்
சொல்லினையுடைய உமாதேவி. கங்கை கரந்தான், மங்கையோர்
கூறுடையான் என்றது தருக்கி வந்த தாழ்குழலை மறைத்தடக்கி,
அநுக்கிரக சக்தியைத் தன் இடப்பாகமாகக் கொண்டு
இருக்கின்ற அருமைப்பாடு அறிவிக்கின்றது. மறையான்
- விதிமுறையானும் விலக்குமுறையானும் அறிவுறுக்கும்
ஆணை மொழியாகிய வேதங்களையுடையவன். பரவித் தொழுவார்
தடுமாற்று - துணிவு பெறாத தொல்லை.
7. பொ-ரை: திருநீறு அணிந்த திருமேனியனாய்த்
திருமுடியில் இளம்பிறையைச் சூடி, கங்கை விளங்கும்
அழகிய நீண்ட சடைமுடியை உடையவனாய், திருவாரூரின்
கண் மகிழ்வோடு எழுந்தருளி விளங்குபவனும், சேற்றின்கண்
அழகியதாய்த் தோன்றி மலர்ந்த தாமரை மலர்மேல்
விளங்கும் பிரமனது சிரங்களில் ஒன்றைக் கொய்த,
சிவந்த கண்களை உடைய விடையேற்றை வெற்றிக்
கொடியாகக் கொண்டவனுமாகிய சிவபெருமானே எம்
தலைவனாவான்.
கு-ரை: இங்ஙனம், ஆனமாக்களின் தடுமாற்றறுப்பவரே
தலைவர்; அவருடைய திருமேனியமைப்பும் இடமும் இத்தகைய
என்பன முதலியவற்றை இப்பாடலில் அறிவிக்கின்றார்.
நிரம்பாமதி - இறைவன் முடியிலிருந்தும் நிரம்பாத
பிள்ளைமதி. நிரம்பா மதிசூடி,
|