* * * * * * * * 8
1140. வல்லியந் தோலுடையான்
வளர்திங்கட்
கண்ணியினான் வாய்த்த
நல்லிய னான்முகத்தோன்
றலையின் னறவேற்றான்
அல்லியங் கோதைதன்னை யாகத்
தமர்ந்தருளி யாரூர்ப்
புல்லிய புண்ணியனைத்
தொழுவாரும் புண்ணியரே. 9
_________________________________________________
நீண்ட ஆறு அணிசடையன் என்றது குறைப்
பொருளையும், நிறைப்பொருளையும் ஒப்ப நோக்குவான்
என்பது விளக்கிற்று. சேறணி மாமலர் - சேற்றிற் பிறந்து
அழகு செய்யும் தாமரை. சேறணி மாமலர்மேற் பிரமன்
என, பிரமன் உந்தியந் தாமரையிலிருந்தும் கூறியது,
தாமரை என்ற பொதுமை நோக்கி. ‘புற்றில்வாளரவன’
(திருக்கோவை) என்று மணிவாசகர் கூறியருளியது போல.
பிரமன் சிரமரிந்த செங்கண் ஏறணி வெல்கொடியான்
என்றது மகன்றலையறுக்கவும் ஒரு கரத்துக் கொடியாக
இருந்த இடபவடிவினனாகிய திருமால், பார்த்துக்கொண்டே
யிருப்பதைத் தவிரத் தவிர்க்க முடியாத வண்ணம்
தலைமைபடைத்தவன்; அவனே எம் தலைவன் எனத் தலைவனின்
தனிச்சிறப்பினை விளக்கியவாறு.
8. * * * * * * *
9. பொ-ரை: வலிய புலியினது தோலை
உடுத்தவனும், வளர்தற்குரிய பிறைமதியைக கண்ணியாகச்
சூடியவனும், நல்லியல்புகள் வாய்ந்த பிரமனது தலையில்
பலியேற்று உண்பவனும், அல்லியங்கோதை என்ற
பெயருடைய அம்மையைத் தனது திருமேனியின் ஒரு பாகமாகக்
கொண்டவனும் ஆகிய திருவாரூரில் விளங்கும் புண்ணியனைத்
தொழுபவர்களும் புண்ணியராவர்.
கு-ரை: அத்தலைவன், அடைவார் எளிதில்
அடைந்துய்ய அல்லியங் கோதையுடன் அருள்மூர்த்தியாய்
ஆரூரில் அமர்ந்திருக்கின்றான் என இப்பாடலில்
இடம் குறிக்கின்றார். வல்லியம் - புலி. நல்லியல்
வாய்த்த நான்முகத்தோன் - தான் பிரமம் என்ற தன்மையொழிந்து
தலைவனையுணர்தலாகிய நல்லியல்பு வாய்க்கப் பெற்ற
|