பக்கம் எண் :

1034திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1144. மத்த மதக்கரியை மலையான்மக

ளஞ்சவன்று கையால்

மெத்த வுரித்தவெங்கள்

விமலன் விரும்புமிடம்

தொத்தல ரும்பொழில்சூழ் வயல்சேர்ந்தொளிர்

நீலநாளுந் நயனம்

ஒத்தல ருங்கழனித்

திருவூறலை யுள்குதுமே. 2

1145. ஏன மருப்பினொடு மெழிலாமையும்

பூண்டழகார் நன்றும்

கானமர் மான்மறிக்கைக்

கடவுள் கருதுமிடம்

வான மதிதடவும் வளர்சோலைகள்

சூழ்ந்தழகார் நம்மை

ஊன மறுத்தபிரான்

றிருவூறலை யுள்குதுமே. 3

__________________________________________________

2. பொ-ரை: மதம் பொருந்திய பெரிய தலையையுடைய யானையை மலைமகள் அஞ்ச, முற்காலத்தில் தன் கைகளால் மெல்ல உரித்த எங்கள் விமலனாகிய சிவபெருமான் விரும்பும் இடம் யாதெனவினவில், பூங்கொத்துக்கள் விரிந்துள்ள பொழில்கள் சூழ்ந்ததும், வயல்களில் நாள்தோறும் முளைத்து விளங்கிய நீல மலர்கள் மங்கையரின் கண்களையொத்து மலரும் வயல்வளங்களை உடையதுமான திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும் நினைவோமாக.

கு-ரை: யானையை உரித்த இறைவன் விரும்பும் இடம் ஊறல்: அதனை உள்குவோம் என்கின்றது. மெத்த - மிக. தொத்து - கொத்து. நயனம் - கண்.

3. பொ-ரை: பன்றிக் கொம்புகளோடு ஆமையோட்டையும் அணிகலனாக அழகுறப் பூண்டு, நல்ல காட்டில் வாழும் மான்கன்றைத் தன் கையில் ஏந்தியுள்ள கடவுளாகிய சிவபெருமான் விரும்புமிடம், வானத்தின் கண் உள்ள மதி தோயுமாறு வளர்ந்துள்ள சோலைகளால் அழகுறச் சூழப்பட்டு நமது பிறவிப் பிணியைப் போக்க வல்லவனாய்ச்