1146. நெய்யணி மூவிலைவே னிறைவெண்மழு
வும்மனலு மன்று
கையணி கொள்கையினான்
கடவுள் ளிடம்வினவில்
மையணி கண்மடவார் பலர்வந்
திறைஞ்சமன்னி நம்மை
உய்யும் வகைபுரிந்தான்
றிருவூறலை யுள்குதுமே. 4
1147. எண்டிசை யோர்மகிழ
வெழின்மாலையும்
போனகமும் பண்டு
சண்டி தொழவளித்தான்
அவன்றாழு மிடம்வினவில்
__________________________________________________
சிவபிரான் எழுந்தருளிய திருவூறலாகும்.
அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.
கு-ரை: பன்றிக் கொம்பு. ஆமையோடு
இவற்றை அணிந்து மான் ஏந்திய கடவுள் இடம் ஊறல்;
அதனைத் தியானிப்போம் என்கின்றது. ஏனம் - பன்றி.
எழில் - அழகு. மான்மறி - மான்குட்டி. ஊனம் - குறை.
4. பொ-ரை: நெய் பூசப்பெற்ற மூவிலை வேல்,
ஒளிநிறைந்த வெண்மழு, அனல் ஆகியவற்றைத் தன் கைகளில்
அணியும் கோட்பாட்டினை உடைய கடவுள்
விரும்பும் இடம் யாதென வினவுவீராயின், மை பூசப்பெற்ற
கண்களையுடைய மடவார் பலர் வந்து வழிபட நிலையாகத்
தங்கி, நாம் உய்யும் வகையில் எழுந்தருளி
அருள்புரியும் திருவூறலாகும். அத்தலத்தை நாம் நாள்தோறும்
நினைவோமாக.
கு-ரை: திரிசூலம், மழ, அனல் இவற்றைக் கையில்
ஏந்திய கடவுள் இடம் திரு ஊறல் என்கின்றது.
நெய்யணி - நெய் பூசப்பெற்ற. ஆயுதங்கள்
துருப்பிடிக்காவாறு நெய் பூசிவைத்தல் மரபு. உய்யும்
வகை - துன்பத்தினின்று ஈடேறும் வகை.
5. பொ-ரை: எட்டுத் திசைகளில் உள்ளாரும்
கண்டு மகிழுமாறு தன்னைத் தொழுத சண்டீசர்க்கு அழகிய
மாலை, உணவு முதலிய
|