பக்கம் எண் :

1036திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


கொண்டல்கள் தங்குபொழிற் குளிர்பொய்கைகள்

சூழ்ந்து நஞ்சை

உண்டபி ரானமருந்

திருவூறலை யுள்குதுமே. 5

* * * * * * * 6, 7

1148. கறுத்த மனத்தினொடுங் கடுங்காலன்வந்

தெய்துதலுங் கலங்கி

மறுக்குறு மாணிக்கருள

மகிழ்ந்தா னிடம்வினவில்

செறுத்தெழு வாளரக்கன் சிரந்தோளு

மெய்யுந்நெரிய வன்று

ஒறுத்தருள் செய்தபிரான்

றிருவூறலை யுள்குதுமே. 8

__________________________________________________

வற்றை முற்காலத்தே அளித்தருளியவனும், கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு தேவர்களைக் காத்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில், மேகங்கள் தங்கும் பொழில்களும், குளிர்ந்த பொய்கைகளும் சூழ்ந்து விளங்கும் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.

கு-ரை: தான் சாத்திய மாலையும் உண்ட உணவும், சண்டேசுரர்க்கு அருள் செய்தவன் இடம் திரு ஊறல் என்கின்றது போனகம் - உணவு. சண்டி - சண்டேசுவரர். கொண்டல்கள் - மேகங்கள்.

6, 7. * * * * * * *

8. பொ-ரை: சினம் பொருந்திய மனத்தோடு கூடிய கொடிய காலன் தம் வாழ்நாளைக் கவர வந்து அடைதலைக் கண்டு கலங்கி மயங்கிய மார்க்கண்டேயனுக்கு அருள் புரிந்தவனும், தன்னை மதியாது சினந்து வந்த வாள்வல்ல இராவணனின் தலை, தோள், உடல் ஆகியனவற்றை முற்காலத்தில் நெரித்து அருள் செய்தவனுமாகிய சிவபிரான் விரும்பி உறையும் இடம் யாதென வினவில் திருவூறலாகும். அதனை நாம் நாள்தோறும் நினைவோமாக.