1149. நீரின் மிசைத்துயின்றோ
னிறைநான்
முகனுமறியா தன்று
தேரும் வகை நிமிர்ந்தான்
அவன்சேரு மிடம்வினவில்
பாரின் மிசையடியார் பலர்வந்
திறைஞ்சமகிழ்ந் தாகம்
ஊரு மரவசைத்தான்
றிருவூறலை யுள்குதுமே. 9
1150. பொன்னியல் சீவரத்தார்
புளித்தட்டையர்
மோட்டமணர் குண்டர்
என்னு மிவர்க்கருளா
வீசனிடம் வினவில்
தென்னென வண்டினங்கள்
செறியார்பொழில்
குழ்ந்தழகார் தன்னை
உன்ன வினைகெடுப்பான்
றிருவூறலை யுள்குதுமே. 10
_________________________________________________
கு-ரை: மார்க்கண்டேயற்கு அருள்செய்த
இறைவன் இடம் திருஊறல் என்கின்றது. கறுத்த - கோபித்த.
மறுக்குறும் - மயங்கிய. மாணி - பிரமசாரியாகிய
மார்க்கண்டன். செறுத்து - கோபித்து. அரக்கன் என்றது
இராவணனை. ஒறுத்து - தண்டித்து.
9. பொ-ரை: கடல்நீரின் மேல்
துயில் கொள்வோனாகிய திருமாலும் ஞானத்தினால் நிறைவுபெற்ற
நான்முகனும் அறிய முடியாமல் தேடி ஆராயுமாறு நிமிர்ந்து
நின்றவனும், மண்ணுலகில் அடியவர் பலரும் வந்து வணங்க
மகிழ்ந்து ஊரும் பாம்பினை இடையில் கட்டியவனும்
ஆகிய சிவபிரான் எழுந்தருளிய இடம் யாதென வினவில்
திருவூறலாகும். அதனை நாமும் உள்குவோமாக.
கு-ரை: அயனும் மாலும் அறியாதவண்ணம்
அக்கினி மலையாய் நிமிர்ந்தவன் இடம் திரு ஊறல்
என்கின்றது. நீரின் மிசைத் துயின்றோன் - திருமால்.
தேரும் வகை - ஆராயும் வகை.
10. பொ-ரை: பொன்போன்ற மஞ்சட்
காவியுடை அணிந்த புத்தர்கள், புளிப்பேறிய காடியைத்
தட்டில் இட்டு உண்பவர்கள் ஆகிய
|