பக்கம் எண் :

1056திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1179. கலையவன் மறையவன் காற்றொடுதீ
மலையவன் விண்ணொடு மண்ணுமவன்
கொலையவன் கொடிமதில் கூட்டழித்த
சிலையவன் வளநகர் சிரபுரமே. 6

1180. வானமர் மதியொடு மத்தஞ்சூடித்
தானவர் புரமெய்த சைவனிடங்
கானமர் மடமயில் பெடைபயிலுந்
தேனமர் பொழிலணி சிரபுரமே. 7

1181. மறுத்தவர் திரிபுர மாய்ந்தழியக்
கறுத்தவன் காரரக் கன்முடிதோள்

_________________________________________________

படரும் மாதவி எனும் குருக்கத்தி ஆகியன நிறைந்த அழகிய புதர்களால் சூழப் பட்ட சிரபுரம் என்னும் நகரமாகும்.

கு-ரை: அருந்திறல் - பிறரால் வெல்லுதற்கு அரிய வலிமை. சரம் துரந்து - அம்பைச் செலுத்தி. சங்கரன் - சுகத்தைச் செய்பவன். குருந்து - குருந்தமரம். மாதவி - குருக்கத்தி, புறவு - காடு.

6. பொ-ரை: கலைகளாக விளங்குபவனும், வேதங்களை அருளியவனும் காற்று, தீ, மலை, விண், மண் முதலியனவாகத் திகழ்பவனும் கொடிகள் கட்டப்பெற்ற அசுரர்களின் முப்புரங்களை அவற்றின் மதில்களோடு கூட்டாக அழித்த மேருவில் ஏந்திய கொலையாளனும் ஆகிய சிவபெருமானது வளநகர் சிரபுரமாகும்.

கு-ரை: கலையவன் - கல்வியினால் எய்தும் பயனாகிய ஞானம் ஆயவன், மதில் அழித்த கொலையவன் எனக்கூட்டுக.

7. பொ-ரை: வானத்தில் உலவும் பிறை மதியையும், ஊமத்த மலரையும் முடியிற் சூடி, அசுரர்களின் முப்புரங்களை எய்தழித்த சைவன் இடம், காடுகளில் வாழும் இள ஆண் மயில்கள் பெண் மயில்களோடு கூடி மகிழ்வதும் இனிமை நிறைந்து விளங்குவதுமான சிரபுரமாகும்.

கு-ரை: தானவர் - அசுரர். கான் - காடு.

8. பொ-ரை: தன்னோடு உடன்பாடு இல்லாது மாறுபட்டு ஒழுகிய அசுரர்களின் முப்புரங்களும் கெட்டு அழியுமாறு சினந்தவனும்,