பக்கம் எண் :

1058திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1184. அருமறை ஞானசம் பந்தனந்தண்
சிரபுர நகருறை சிவனடியைப்
பரவிய செந்தமிழ் பத்தும்வல்லார்
திருவொடு புகழ்மல்கு தேசினரே. 11

திருச்சிற்றம்பலம்

__________________________________________________

கு-ரை: வெற்று அரை உழல்பவர் - ஆடையில்லாத இடையோடு திரிகின்றவர்கள். அறவுரை கற்றிலர் எனமாறுக. புறன் உரைக்க - பொருந்தாத புறம்பான உரைகளைச் சொல்ல. பற்றலர் - பகைவர்.

11. பொ-ரை: அரிய மறைகளை ஓதாது உணர்ந்த ஞானசம்பந்தன் அழகிய தண்ணளியை உடைய சிரபுர நகரில் எழுந்தருளிய சிவபெருமான் திருவடிகளைப் பரவிப் போற்றிய இப்பதிகச் செந்தமிழ் பத்தையும் ஓத வல்லவர் செல்வத்துடன் புகழ் நிறைந்து ஒளியுடன் திகழ்வர்.

கு-ரை: தேசினர் - ஒளியையுடையவர்கள்.

திருஞானசம்பந்தரின் செந்தமிழ்ப் பாடல்

புனலில் ஏடெதிர் செல்லெனச் செல்லுமே

புத்த னார்தலை தத்தெனத் தத்துமே

கனலில் ஏடிடப் பச்சென்றிருக்குமே

கதவு மாமறைக் காட்டில் அடைக்குமே

பனையில் ஆண்பனை பெண்பனை யாகுமே

பழைய என்புபொற் பாவைய தாகுமே

சினவரா விடம் தீர்கெனத் தீருமே

செய்ய சம்பந்தன் செந்தமிழ்ப் பாடலே.

- தனிப்பாடல்.