110. திருவிடைமருதூர்
பதிக வரலாறு:
32-ஆம் பதிகம் பார்க்க.
பண் : வியாழக்குறிஞ்சி
பதிக எண்: 110
திருச்சிற்றம்பலம்
1185. மருந்தவன் வானவர் தானவர்க்கும்
பெருந்தகை பிறவினொ டிறவுமானான்
அருந்தவ முனிவரொ டால்நிழற்கீழ்
இருந்தவன் வளநக ரிடைமருதே. 1
1186. தோற்றவன் கேடவன் றுணைமுலையாள்
கூற்றவன் கொல்புலித் தோலசைத்த
__________________________________________________
1. பொ-ரை: பிறவி நோய் தீர்க்கும்
மருந்தாக விளங்குபவனும், தேவர்கட்கும் அசுரர்கட்கும்
தலைவனாய் விளங்குபவனும், உயிர்களின் பிறப்பு
இறப்பிற்குக் காரணமானவனும், அரிய தவம் உடைய சனகாதி
முனிவர்களோடு கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து
அறம் உரைத்தருளியவனுமான சிவபிரானது வளநகர்
இடைமருதாகும்.
கு-ரை: இப்பதிகம் முழுதும் இறைவன் திருநகர்
இடைமருதே என்கின்றது. மருந்தவன் - மருந்துபோல்பவன்.
மருந்து, நோய் நீக்கவும், நோய் வாராமல் தடுக்கவும்,
உடலை வளர்க்கவும் உண்ணப்படுமாறு போல இறைவனும்
அநாதியே பந்தித்த மலப்பிணியினீக்கவும், வினை
ஏறாமல் காக்கவும், கைவந்த சிவஞானங் கழன்றுபோம்வண்ணம்
வாசனை தாக்காமல் வளர்க்கவும் உபகாரப்படுதலின்
மருந்தவன் என்றருளினார். அமுதமாயினான் எனலுமாம்.
தானவர் - அசுரர். பிறவுஇறவு - பிறப்பு. இறப்பு. ‘வு‘
விகுதிபெற்ற தொழிற்பெயர்; மிக அருமையான பிரயோகம்.
முனிவரோடு ஆலநிழல் கீழ் இருந்தவன் எனப்பிரிக்க.
2. பொ-ரை: உயிர்களின் தோற்றத்திற்கும்
கேட்டிற்கும் காரணமானவனும், இணையான தனங்களை
உடைய உமையம்மையை ஒரு
|