பக்கம் எண் :

1060திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


நீற்றவ னிறைபுன னீள்சடைமேல்
ஏற்றவன் வளநக ரிடைமருதே. 2

1187. படையுடை மழுவினன் பால்வெண்ணீற்றன்
நடைநவி லேற்றினான் ஞாலமெல்லாம்
உடைதலை யிடுபலி கொண்டுழல்வான்
இடைமரு தினிதுறை யெம்மிறையே. 3

1188. பணைமுலை யுமையொரு பங்கனொன்னார்
துணைமதிண் மூன்றையுஞ் சுடரின்மூழ்கக்
கணைதுரந் தடுதிறற் காலற்செற்ற
இணையிலி வளநக ரிடைமருதே. 4

__________________________________________________

கூறாகக் கொண்டவனும், கொல்லும் தொழிலில் வல்ல புலியினது தோலை இடையில் கட்டியவனும், மெய்யெலாம் திருநீறு அணிந்தவனும், பெருகிவந்த கங்கையை நீண்டசடைமுடிமேல் ஏற்று உலகைக் காத்தவனுமான சிவபிரானது வளநகர் இடைமருதாகும்.

கு-ரை: தோற்றவன் - பிறப்பையருளியவன். கேடவன் - அழித்தவன். கூற்றவன் - பாகமதுடையான்.

3. பொ-ரை: மழுவைத் தனக்குரிய ஆயுதமாகக் கொண்டவனும், பால் போன்று வெள்ளிய திருநீற்றை மேனிமேல் பூசியவனும், இனிய நடையைப் பழகுகின்ற விடை ஏற்றை உடையவனும், உடைந்த தலையோட்டில் பலி கொண்டு உலகெலாம் திரிந்துழல்பவனும் ஆகிய எம் தலைவனாகிய சிவபெருமான் இனிது உறையும் நகர் இடைமருதாகும்.

கு-ரை: நடைநவில் - நடைபழகுகின்ற. உடைதலை - உடைந்த கபாலம்.

4. பொ-ரை: பருத்த தனங்களை உடைய உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவனும், பகைவராகிய அசுரர்கட்குத் துணையாக இருந்த மூன்று அரணங்களையும் தீயில் மூழ்கி அழியுமாறு கணையைச் செலுத்தி அழித்தவனும், காலனைச் செற்ற ஒப்பிலியும் ஆகிய சிவ பெருமானது வளநகர் இடைமருது ஆகும்.