பக்கம் எண் :

1062திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1191. நனிவளர் மதியொடு நாகம்வைத்த
பனிமலர்க் கொன்றையம் படர்சடையன்
முனிவரொ டமரர்கண் முறைவணங்க
இனிதுறை வளநக ரிடைமருதே. 7

1192. தருக்கின வரக்கன தாளுந்தோளும்
நெரித்தவ னெடுங்கைமா மதகரியன்
றுரித்தவ னொன்னலர் புரங்கண்மூன்றும்
எரித்தவன் வளநக ரிடைமருதே. 8

1193. பெரியவன் பெண்ணினொ டாணுமானான்
வரியர வணைமறி கடற்றுயின்ற

__________________________________________________

7. பொ-ரை: நாள்தோறும் ஒரு கலையாக நன்றாக வளர்தற்குரிய பிறை மதியோடு பாம்பையும் உடனாக வைத்துள்ளவனும் குளிர்ந்த கொன்றை மலர்மாலை சூடிய விரிந்த சடைமுடியை உடையவனும் ஆகிய சிவபிரான் முனிவர்களும் தேவர்களும் முறையாக வணங்க இனிதாக உறையும் வளநகர் இடைமருதாகும்.

கு-ரை: பனிமலர் - குளிர்ந்தமலர், முனிவர் முன்னும், தேவர் பின்னுமாக வணங்குதல் முறையாதலின் முறை வணங்க என்றார். முனிவர்கள் வணக்கம்; உலகம் உய்யவந்த நிஷ்காமிய வணக்கம்; தேவர்கள் வணக்கம்; அசுரர் அழியத் தாம் வாழ வேண்டும் என்னும் காமிய வணக்கம்; ஆதலின் அவர்கள் முன்னும் தேவர்கள் பின்னும் முறையே வணங்க என்றது.

8. பொ-ரை: செருக்குற்ற அரக்கனாகிய இராவணனின் தாள்களையும், தோள்களையும் நெரித்தவனும், நீண்ட கையை உடைய பெரிய மத யானையை அக்காலத்தில் உரித்துப் போர்த்தவனும், பகைவர்களாகிய அசுரர்களின் புரங்கள் மூன்றையும் எரித்தவனும் ஆகிய சிவபெருமானது வளநகர் இடைமருதாகும்.

கு-ரை: அரக்கன் - இராவணன். ஒன்னலர் - பகைவர்.

9. பொ-ரை: எல்லோரினும் பெரியவனும், பெண் ஆண் வடிவாக விளங்குபவனும், வயிற்றிடையே கீற்றுக்களாகிய கோடுகளை உடைய பாம்பணைமேல் கடலிடையே துயிலும் கரியவனாகிய