பக்கம் எண் :

1064திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


கு-ரை: இடைமருதூர்ப் பதிகமாகிய இப்பத்தையும் வல்லவர், உலகிற் புகழோடு ஓங்கி வாழ்வர் என்கின்றது. பலமிகு தமிழ் - பயன் மிகுந்த தமிழ். தெய்வபலமிகுந்த தமிழ் என்றுமாம். புகழ் இம்மைப் பயனே என்பார் உலகு உறு புகழ் என்று அருளினர். நலம் - திருவருட்டிறம்.

திருப்புகழ்

கறுவி மைக்கணிட் டினித ழைத்தியற்

கவிசொ லிச்சிரித்து உறவாடிக்

களவு வித்தையிட்டு உளம் உருக்கிமுற்

கருதி வைத்தவைப் பவைசேரத்

தறுக ணிற்பறித் திருக ழுத்துறத்

தழுவி நெக்குநெக் குயிர்சோரச்

சயன மெத்தையிற் செயல ழிக்குமித்

தருணி கட்ககப் படலாமோ

பிறவி யைத்தணித் தருளு நிட்களப்

பிரம சிற்சுகக் கடல்மூழ்கும்

பெருமு னித்திரட் பரவு செய்ப்பதிப்

ப்ரபல கொச்சையிற் சதுர்வேதச்

சிறுவ நிற்கருட் கவிகை நித்திலச்

சிவிகை யைக்கொடுத் தருள்ஈசன்

செகத லத்தினிற் புகழ்ப டைத்த மெய்த்

திருவ ரத்துறைப் பெருமாளே.

- அருணகிரிநாதர்.