பக்கம் எண் :

1066திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


1198. ஆலிள மதியினொ டரவுகங்கை
கோலவெண் ணீற்றனைத் தொழுதிறைஞ்சி
ஏலநன் மலரொடு விரைகமழும்
காலன வளநகர் கடைமுடியே. 3

1199. கொய்யணி நறுமலர்க் கொன்றையந்தார்
மையணி மிடறுடை மறையவனூர்
பையணி யரவொடு மான்மழுவாள்
கையணி பவனிடங் கடைமுடியே. 4

__________________________________________________

கு-ரை: கங்கையையும் பிறையையும் அணிந்த திருமுடியையும், புலித்தோலை உடுத்த அரையையும் உடைய அடிகளிடம் கடைமுடி என்கின்றது. திரை - அலை. ஆகுபெயரால் கங்கையை உணர்த்தியது. அதள் - தோல்.

3. பொ-ரை: கல்லால மர நீழலில் இளமதி அரவு கங்கை ஆகியன சூடிய சடைமுடியுடனும், அழகிய திருவெண்ணீற்றுடனும், நறுமலர் ஆகியனவற்றால் மணம் பொருத்தமாகக் கமழும் திருவடிகளை உடையவனாக விளங்கும் இறைவனைத் தொழுது இறைஞ்சுதற்குரிய வளநகராக விளங்குவது கடைமுடியாகும்.

கு-ரை: இளம்பிறை முதலியவற்றையுடைய இறைவனைத் தொழ, மலர்மணங்கமழும் திருவடியையுடையவன் நகர் கடைமுடி (அடைவோம்) என்கின்றது. இறைஞ்சி என்ற செய்து என் வினையெச்சத்தைச் செயவென் எச்சமாக மாற்றுக. இறைஞ்சக் கமழும் காலன நகர் எனமுடிக்க.

4. பொ-ரை: கொய்யப் பெற்ற அழகிய மணம் கமழும் கொன்றை மலர்மாலை அணிந்தவனாய் விடம் பொருந்திய கண்டத்தை உடையவனாய், படம் பொருந்திய பாம்பையும், மான் மழு வாள் ஆகியவற்றையும் கையின்கண் அணிந்தவனாய் விளங்கும் மறை முதல்வனது ஊர் கடைமுடியாகும்.

கு-ரை: கொன்றையையணிந்த நீலகண்டனும், அரவையும், மானையும், மழுவையும் கையில் அணிந்தவனும் ஆகிய இறைவன் இடம் கடைமுடி என்கின்றது. கொய் - கொய்யப்பெற்ற. மை - விடம். பை - படம்.