1202. பொடிபுல்கு மார்பினிற் புரிபுல்குநூல்
அடிபுல்கு பைங்கழ லடிகளிடம்
கொடிபுல்கு மலரொடு குளிர்சுனைநீர்
கடிபுல்கு வளநகர் கடைமுடியே. 7
1203. நோதல்செய் தரக்கனை நோக்கழியச்
சாதல்செய் தவனடி சரணெனலும்
ஆதர வருள்செய்த வடிகளவர்
காதல்செய் வளநகர் கடைமுடியே. 8
1204. அடிமுடி காண்கில ரோரிருவர்
புடைபுல்கி யருளென்று போற்றிசைப்பச்
__________________________________________________
7. பொ-ரை: திருநீறு அணிந்த
மார்பின்கண் முறுக்கேறிய பூணூலை அணிந்தவராய், திருவடிகளில்
பொருந்திய அழகிய கழல்களை உடையவராய் விளங்கும்
அடிகள் இடம் கொடிகளில் பூத்த மலர்களோடு குளிர்ந்த
சுனை நீரின் மணம் கமழும் வளநகராகிய கடை
முடியாகும்.
கு-ரை: மார்பிற்பூணூலையும், திருவடியிற்கழலையும்
பூண்ட அடிகளிடம் இது என்கின்றது. பொடி - விபூதி.
கொடிபுல்கு மலர் - முல்லைக்கொடியில் பொருந்தியுள்ள
மலர். கடி - காவல்.
8. பொ-ரை: இராவணனைத் துன்புறுமாறு செய்து,
அவன்மீது முதலில் கருணை நோக்கம் செய்யாமல் வலிமை
காட்டிப்பின் அவன் திருவடியே சரண் எனக் கூறிய அளவில்
அவனுக்கு ஆதரவு காட்டி அருள்செய்த அடிகளாகிய சிவபிரானார்
விரும்பும் வளநகர் கடைமுடியாகும்.
கு-ரை: இராவணன் வலியடக்கி யாட்கொண்ட
இறைவன் இடம் இது என்கின்றது. நோதல்செய்து - வருத்தி.
நோக்கு அழிய - திருவருட்பார்வைகெட, சாதல்செய்தவன்
- அழிந்து பட்டவனாகிய இராவணன்.
9. பொ-ரை: அடிமுடி காணாதவராகிய திருமால்
பிரமர் அருகிற்சென்று அருள்புரிக எனப் போற்றி செய்து
வழிபடுமாறு, சடைமிசையே கங்கையை அணிந்த சதுரப்பாடுடைய
சிவபிரானது இடமாக
|