சடையிடைப் புனல்வைத்த சதுரனிடம்
கடைமுடியதனயல் காவிரியே. 9
1205. மண்ணுதல் பறித்தலு மாயமிவை
எண்ணிய காலவை யின்பமல்ல
ஒண்ணுத லுமையையொர் பாகம்வைத்த
கண்ணுதல் வளநகர் கடைமுடியே. 10
1206. பொன்றிகழ் காவிரிப் பொருபுனல்சீர்
சென்றடை கடைமுடிச் சிவனடியை
நன்றுணர் ஞானசம் பந்தன்சொன்ன
இன்றமி ழிவைசொல வின்பமாமே. 11
திருச்சிற்றம்பலம்
_________________________________________________
விளங்குவது காவிரியின் அயலிலே உள்ள
கடைமுடியாகும்.
கு-ரை: அடிமுடியறியாத அயனும் மாலும்
அருள் என்று போற்றிசைப்ப, கங்கைசூடிய பெருமானிடம்
இது என்கின்றது. புடைபுல்கி அணுகி.
10. பொ-ரை: நீரிற் பல கால் மூழ்கலும்
மயிர் பறித்தலும் ஆகிய புத்த சமண விரத ஒழுக்கங்கள்
பொய்யானவை; ஆராயுமிடத்து இவை இன்பம் தாரா. ஒளி
பொருந்திய நுதலினளாகிய உமையம்மையை ஒருபாகமாகக்
கொண்டுள்ள கண்ணுதலோனின் வளநகர் கடைமுடியாகும்.
கு-ரை: முழுகுதலும், மயிர்பறித்தலும்
ஆகிய இந்த விரத ஒழுக்கங்கள் யாவும் வெறும் மாயம்;
எண்ணும்பொழுது இவை இன்பமாகா; உமாதேவியைப் பாகம்வைத்த
பெருமானது இடம் இது என்கின்றது. ஒள்நுதல் - ஒளிபொருந்திய
நெற்றி.
11. பொ-ரை: பொன்துகள் திகழும்
காவிரியாற்றின் அலைகளின் நீர்முறையாகச் சென்று
அடையும் கடைமுடியில் விளங்கும் சிவபிரான் திருவடிப்
பெருமைகளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் சொன்ன இனிய
தமிழாகிய இத்திருப்பதிகப் பாடல்களை ஓதி வழிபட
இன்பம் ஆகும்.
|