பக்கம் எண் :

1070திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்(முதல் திருமுறை)


கு-ரை: காவிரியின் நீர்வளம்மிகுந்த கடைமுடியின்கண் எழுந்தருளியுள்ள சிவனடியைப்பற்றித் திருஞானசம்பந்தன் சொன்ன இனிய தமிழைச்சொல்ல இன்பமாம் என்கின்றது. பொருபுனல் - கரையை மோதுகின்ற நீர். பொன்திகழ் காவிரி - பொன்னியெனப் பெயர் தாங்கித் திகழ்கின்ற காவிரி. பொன் - அழகுமாம். சீர் சென்றடை சிவன் எனக் கூட்டுக. உரைப்பார் உரைக்கும் புகழ்களை உடையான் இவனென உணராதே உரைப்பினும், சென்றடைவது சிவனையே என்பதாம். சீர் சென்றடை கடைமுடி எனலுமாம்.

திருப்புகழ்

தினமணி சார்ங்க பாணி யெனமதிள் நீண்டு சால

தினகரன் ஏய்ந்த மாளி கையிலாரஞ்

செழுமணி சேர்ந்தபீடி கையிலிசை வாய்ந்த பாடல்

வயிரியர் சேர்ந்து பாட இருபாலும்

இனவளை பூண்கை யார்க வரியிட வேய்ந்து மாலை

புழுககில் சாந்துபூசி அரசாகி

இனிதிறு மாந்து வாழும் இருவினை நீண்ட காயம்

ஒருபிடி சாம்பலாகி விடலாமோ

வனசரர் ஏங்க வானமுகடுற ஓங்கி ஆசை

மயிலொடு பாங்கி மார்க ளருகாக

மயிலொடு மான்கள் சூழ வளவரி வேங்கையாகி

மலைமிசை தோன்று மாய வடிவோனே

கனசமண் மூங்கர் கோடி கழுமிசை தூங்கநீறு

கருணைகொள் பாண்டிநாடு பெறவேதக்

கவிதரு காந்த பாலகழுமல பூந்த ராய

கவுணியர் வேந்த தேவர் பெருமாளே.

- அருணகிரிநாதர்.